கம்பராமாயணம் 8212 · யுத்த 18.165

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெங்கணை திறந்த மெய்யர் - கொடிய அம்புகளால் பிளக்கப்பட்ட உடலினை உடைய சில அரக்கர்கள்; ஆற்ற விரைந்து சென்றார் - மிக விரைந்து சென்று; தெரிவையர் செங்குழல் கற்றை சோர - தங்கள் மனைவியருடைய சிவந்த கூந்தல் தொகுதி அவிழ்ந்து விழும்படியாக; அவர் உடல் பொருந்தப் புல்லி - அவர்களுடைய உடம்பை நெருக்கித் தழுவி; அங்கு - அந்த இடத்திலேயே; அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் - அவர்களுடைய உயிருடன் தங்களது உயிரையும் விட்டு இறந்து; தெய்வப் பொங்கு பூம்பள்ளி புக்கார் - தெய்வத்தன்மை பொங்குகிற அழகிய பெரிய படுக்கை ஆகிய வீரசுவர்க்கம் புகுந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some whose bodies the fierce arrows had split open had not yet died; they hurried away,
  2. and while their wives wailed, the red tresses of their hair coming loose,
  3. they embraced them closely, body to body,
  4. and there gave up their lives together with theirs, and entered the divine, flowering bed.

What the poem says

Some demons, mortally wounded, rush home and die in the arms of their weeping wives. Their wives die with them.

The "divine flowering bed" they enter is, the commentary explains, the warrior's heaven (vīracuvarkkam) reserved for those who fall in battle. The verse is a moment of pathos among the enemy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṅ kaṇai tiṟanta meyyar, viḷintilar, viraintu ceṉṟār,
ceṅ kuḻal kaṟṟai cōrat terivaiyar araṟṟa, teyvap
poṅku pūm paḷḷi pukkār; avar uṭal poruntap pulli
aṅku avar āviyōṭum tam uyir pōkki aṟṟār.