கம்பராமாயணம் 8213 · யுத்த 18.166
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடும் பொறி பகழி மார்பர் - கொடுமையான நெருப்புப் பொறி பறக்கும் அம்புகள் தைத்த மார்பினை உடையவர்களான சில அரக்கர்கள்; போயினர் - போர்க்களத்தை விட்டுப்போய்; இடங்கள் புக்கார் - தங்களது இருப்பிடம் புகுந்து; மறிக் கொளும் சிறுவர் தம்மை - மான் மறிபோல் துள்ளி விளையாடும் புதல்வர் தம்மையும்; மற்று உள சுற்றம் தம்மை - மற்றும் உள்ள பிற சுற்றத்தார் தம்மையும்; குழைய நோக்கி - பரிவோடு பார்த்து; அவர் முகம் நோக்கி - அந்த மக்களின் முகங்களைப் பார்த்து; குறிக்கொளும் என்று கூறி - (நீங்கள் இம்மக்களைக்) கருத்துடன் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு; நெறிக்கொளும் கூற்றை நோக்கி - தங்கள் உயிரைக் காப்பாற்ற முறையாகக் கொள்ள வந்த (இயமனைச் சினந்து) பார்த்து; ஆர்உயிர் நெடிது நீத்தார் - தங்களுடைய அருமையான உயிரை (விட முடியாமல்) நீண்ட நேரம் (போராடி) விட்டார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those with cruel, spark-flinging arrows in their chests went off and reached their homes;
- to their children frisking like fawns and the other kin there
- they said, "Take care of them," and looked on their faces tenderly;
- and glaring at Death, who came to take them by his law, they let go of their lives at length.
What the poem says
Another group of wounded demons gets home. They look tenderly at their children, who leap about like young deer, and charge their relatives to look after them.
Then, facing Death with anger as he comes to claim them by right, they let go of life only after a long struggle. Kampaṉ gives even the enemy soldiers a human, grieving face.