கம்பராமாயணம் 8214 · யுத்த 18.167
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர் - சில அரக்கர்கள்; தாமரைக் கண்ணன் தம்பி - தாமரை போன்ற திருக்கண்களை உடைய இராமனது தம்பியாகிய இலக்குவனுடைய; தன்மை ஈது ஆகின் - போரிடும் தன்மை இதுவானால்; இவ்ஊர் - இந்த இலங்கை ஊர்; மெய்யே அரைக்கணத்தின் வேம் - உறுதியாக அரை நொடிப்பொழுதில் வெந்து அழிந்துவிடும்; இராவணி விளிதல் முன்னம் - (ஆகவே) இராவணன் மகனாகிய இந்திரசித்தன் இறப்பதற்கு முன்பே; மாமரக் கானில் - பெரிய மரங்களை உடைய காடுகளிலும்; குன்றில் - குன்றுகளிலும்; மறைந்திரும் - மறைந்து (இலக்குவனின் அம்புக்கு அகப்படாமல்) இருங்கள்; மறைய வல்லே போம் - (அவ்வாறு) மறைவதற்காக விரைவாகப் போங்கள்; எனத் தமரைச் சொல்லி - என்று உறவினர்களைப் (பார்த்துச்) சொல்லி; உடல் துறந்து போனார் - (தங்கள்) உடம்பைத் துறந்து விட்டு வீரசுவர்க்கம் போனார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If such is the nature of the lotus-eyed one's brother, then truly
- this city will burn in half an instant; before Irāvaṇaṉ's son dies,
- hide in the forests of great trees and in the hills; go quickly
- to hide," they told their kin, and some left their bodies and departed.
What the poem says
Some dying demons, judging Ilakkuvaṉ's power, foresee Ilaṅkai being destroyed in a moment. They urge their relatives to flee and hide in the forests and hills before Intiracittu himself falls.
Having given this warning, they die. Without knowing it they foretell the fall of the city.