கம்பராமாயணம் 8215 · யுத்த 18.168
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வள்ளல் வாளி - வள்ளன்மைப் பண்பு உடைய இலக்குவனது அம்புகள்; வரை உண்ட மதுகை மேனி மருமத்து - (அரக்கர்களின்) மலை போன்ற வலிமை உடைய உடம்பின் மார்பில்; இரை உண்டு துயில - (பாய்ந்து) தசையைக் கிழித்து (அங்கேயே) தங்கி இருக்க; சென்றார் - (அவ்வம்பைத் தாங்கிச் சென்ற சில) அரக்க வீரர்கள்; வாங்கிடின் இறப்பம் என்பார் - (இந்த அம்புகளை மார்பில் இருந்து) பிடுங்கினால் இறந்து விடுவோம் என்று எண்ணி; பிரை உண்டபாலின் உள்ளம் பிறிதுற - பிரை ஊற்றிய பால் (வேறுபடுவது) போல மனம் வேறுபட்டு மயங்க; பிறர் முன் சொல்லா - மற்றவர்க்கு முன் சொல்லத் தகாத; உரையுண்ட நல்லோர் என்ன - பழிச்சொற்களை (வாய் விட்டுப் பேசாது மனத்தில்) உண்டு வைத்து அடக்கிய பெரியவர்கள் போல; உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் - பெருமூச்சை மிகுதியாக விட்டு வருந்துபவர்கள் ஆனார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The generous one's arrows, lodged in the chests of their mountain-strong bodies,
- slept there having eaten their fill; those who went off, saying "If we draw them out we die,"
- their minds curdled like milk with a starter in it, like good men
- who swallow words not to be spoken before others, kept heaving sigh after sigh in torment.
What the poem says
Some demons have Ilakkuvaṉ's arrows buried in their chests. The arrows have "fed" on their flesh and now "sleep" there. The demons fear that pulling them out would kill them.
Two similes describe their state. Their minds turn like milk curdled by a starter. They suffer like good people who keep shameful words to themselves rather than say them in front of others, and can only sigh again and again.