கம்பராமாயணம் 8218 · யுத்த 18.171
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கவசத்தைக் கழித்து வீழ்ப்ப - (இலக்குவன் இந்திரசித்தனின் கவசத்தை அறுத்து வீழ்த்த; காப்புறு கடன் இன்று ஆகி - (தன்னை அம்புபடாது) காக்கிற கடமையுள்ள பொருள் வேறு ஒன்றும் இல்லாமல் போனதால்; அவசத்தை அடைந்த வீரன் - தன்னை இழந்த நிலை (மயக்கமடைந்த) அடைந்த வீரனாகிய இந்திரசித்தன்; அறிவுறும் துணையின் - (மயக்கம் தெளிந்து) உணர்வு பெற்று எழுவதற்கு முன்னுள்ள கால அளவில், வீரத்துவசத்தின் - வீரத்தின் அடையாளமாகக் கொடியை உடையதும்; புரவித்திண் தேர் - குதிரைகள் பூட்டப்பெற்றதுமான வலிய தேரினை; கடிதுறத் தூண்டி - விரைவு பொருந்தச் செலுத்தி; யாம் வெம்போர் - நாங்கள் (இந்தக்) கொடிய போரினை; இத்திவசத்தின் முடித்தும் - இந்த நாளிலேயே முடிப்போம்; என - என்று கூறிச்; சினம் திருகிச் சென்றார் - சினம் மிக்கவர்களாய் (புகை நிறக் கண்ணனும் மாபக்கனும்) (இலக்குவன் மீது) சென்றார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "With his armour cut away and nothing left to fulfil the duty of guarding him,
- while the hero who has fallen senseless comes back to his wits, driving
- the strong chariot, with its banner of valour and its horses, at speed, we will
- finish this cruel battle this very day," they said, and went forward, their anger twisting.
What the poem says
Stripped of his armour, Intiracittu falls into a daze. While he lies stunned, his two remaining aides, named in the commentary as the smoke-eyed one and Māpakkaṉ, take matters into their own hands.
They drive their chariot with its war banner straight at Ilakkuvaṉ, vowing to end the battle that day.