கம்பராமாயணம் 8221 · யுத்த 18.174
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தறுகணாளர் - அஞ்சாமைப் பண்பு உடைய அரக்கர் இருவரும்; அவன் கையது - (தங்கள் தண்டு) அந்த அனுமனுடைய கையின்கண்; ஆன தன்மையைக் கண்டனர் - போய்விட்ட தன்மையைக் கண்டார்கள்; கண்டு செய்யலாவது ஒன்றும் காணார் - (அவ்வாறு) கண்டு செய்யத்தக்க செயல் ஒன்றையும் காணாதவர்களாகி; கொண்டனன் - (நம் தண்டைப் பறித்துக்) கொண்டவனாகிய அனுமன்; எறிந்து கொல்லும் - அத்தண்டாலடித்து நம்மைக் கொல்லுவான்; என்று அச்சம் கொண்டார் - என்று அச்சம் கொண்டவர்களாக; உண்ட செஞ்சோறும் நோக்கார் - (இராவணனிடம்) உண்ட செஞ்சோற்றுக் கடனையும் எண்ணாது; உயிருக்கே உதவி செய்தார் - (தம்) உயிருக்கு உதவி செய்பவர்களாய்ப் புறமுதுகு காட்டி ஓடி ஒளிந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the fearless ones saw that the maces had passed into his hands,
- seeing it, they could find nothing at all to do;
- "He has taken them; he will strike us and kill us," they thought, and were afraid,
- and with no thought for the red rice they had eaten, they did a service to their own lives.
What the poem says
Disarmed, the two demons see no way forward and fear Aṉumaṉ will kill them with their own maces.
They forget the "red rice" they have eaten, the debt of loyalty a warrior owes the lord who has fed him, and run off to save their skins. The poet's phrase "did a service to their lives" is pointedly ironic.