கம்பராமாயணம் 8222 · யுத்த 18.175

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காற்று வந்து அசைத்தலாலும், காலம் அல்லாமை யாலும்,
கூற்று வந்து ஆவி கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும்,
தேற்றம் வந்து எய்தி, நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார்;
ஏற்றமும் வலியும் பெற்றார்; எழுந்தனர் வீரர் எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

வீரர் எல்லாம் காற்று வந்து அசைத்தலாலும் - (இந்திரசித்தனிடம் போர் செய்து மயக்கம் அடைந்து இருந்த) வானர வீரர்கள் எல்லோரும் காற்று வந்து மென்மையாக வீசுவதாலும்; காலம் அல்லாமையாலும் - (தாங்கள் இறந்து போவதற்கு உரிய) காலம் அது அல்லாமையாலும்; கூற்று வந்து - இயமன் வந்து; உயிரைக் கொள்ளும் - (தங்கள்) உயிரைக் கொள்ளுகின்ற; குறி இன்மை குறித்தலாலும் - அடையாளம் (எதுவும்) இன்மை தெரிதலாலும், நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் - (தங்களுடன் வந்து பொருந்தி) நின்ற மயக்கமும் வருத்தமும் தீர்ந்தவர்களாக; தேற்றம் வந்து எய்தி - தெளியும் தன்மை வந்து பொருந்தி; ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் - ஊக்கமும் வலிமையும் பெற்று எழுந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the wind came and stirred them, because it was not their time,
  2. and because they saw no sign of Death coming to take their lives,
  3. clarity returned to them, and the stupor and pain that had held them left them;
  4. they regained their spirit and strength; all the warriors rose up.

What the poem says

The monkey warriors whom Intiracittu had knocked unconscious now revive. The poet gives three reasons: the wind blows over them (Aṉumaṉ's father, the Wind, is a fitting reviver), it is not their fated hour, and Death shows no sign of coming for them.

Their stupor and pain lift, and they stand up with their courage and strength restored.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṟṟu vantu acaittalālum, kālam allāmaiyālum,
kūṟṟu vantu uyiraik koḷḷum kuṟi iṉmai kuṟittalālum,
tēṟṟam vantu eyti, niṉṟa mayakkamum nōvum tīrntār;
ēṟṟamum valiyum peṟṟār; eḻuntaṉar vīrar ellām.