கம்பராமாயணம் 8225 · யுத்த 18.178
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மரங்களும் - (வானரப்படை வீரர்கள்) மரங்களையும்; மலையும் - மலைகளையும்; கல்லும் - கற்களையும்; மழை என வழங்கி - மழை போல வீசி அடித்துக்கொண்டு; வந்து நெருங்கினார் - வந்து நெருங்கினார்கள்; நெருங்கக் கண்டும் - (அவர்கள் அவ்வாறு) நெருங்கி வருவதைப் பார்த்தும், (அச்சமோ மன மயக்கமோ கொள்ளாது); ஒரு தனி வில்லும் - ஒப்பற்ற தனித்தன்மை உடைய (தன்) வில்லினையும்; சரங்களும் - அம்பினையும்; துணையாய் நின்ற நிசாசரன் - (மட்டும்) துணையாகக் கொண்டு நின்ற இரவில் சஞ்சரிக்கும் தன்மை உள்ள இந்திரசித்தனின்; தனிமை நோக்கி - தனிமையைப் பார்த்து; இரங்கினன் என்ன - மன இரக்கம் கொண்டவன் போல், மேல் பால் குன்று புக்கு - மேற்கில் உள்ள அந்த கிரிக் குன்றில் புகுந்து; இரவி நின்றான் - கதிரவன் (மறைந்து) நின்றான்.
இயற்கை நிகழ்ச்சியைக் காரணம் காட்டி விளக்கிய ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Raining trees and hills and stones, they came
- and pressed close; seeing them close in, and seeing the solitude of the night-walker
- who stood with only his matchless heart, his bow and his arrows for allies,
- as if in pity, the Sun went into the western mountain and stood there.
What the poem says
The monkeys close in on Intiracittu from every side. He stands alone, with only his courage, his bow and his arrows for company.
At that moment the sun sets behind the western mountain. The poet says it is as if the sun pitied the demon's loneliness. The commentary names the figure: poetic fancy that gives a natural event an invented cause (taṟkuṟippēṟṟam).