கம்பராமாயணம் 8226 · யுத்த 18.179
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாழிய வேதம் நான்கும் - வாழ்வனவாகிய வேதங்கள் நான்கும்; மனு முதல் வந்த நூலும் - மனு நூலை முதலாகக் கொண்டு தோன்றிய தரும நூல்களும்; வேள்விகளும் - வேள்விகளும்; மெய்யும் - சத்தியமும்; தெய்வ வேதியர் விழைவும் - தெய்வத்தை(ப் போற்றி வணங்குகிற) அந்தணர்கள் விரும்பும்; அஃதே - அந்தப் பெரும் பேறும் (ஆகிய) அனைத்தும்; ஆழி அம் கமலக்கையான் - சுதர்சனம் என்னும் சக்கரப் படையை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளை உடையவனாகிய; ஆதி அம் பரமன் - முதற் பொருளான அழகிய நாராயண சொரூபமே; என்னா - என்று உணராத, ஏழையர் உள்ளம் என்ன - அறிவற்றவர்களின் மனம் போல; திசைகள் எல்லாம் - எல்லாத் திசைகளும், இருண்டன - இருளடைந்தன.
அஞ்ஞானிகளின் மனம் போலத் திசைகள் எல்லாம் இருண்டன என்றார். வேதம் பரம்பொருளின் சுயரூபம் முதலியவற்றைப் பிரதிபலித்தலாலும், மனுமுதல்நூல் - வேதப் பொருளை உணர உதவுதலாலும், வேள்வி - பரம் பொருளின் ஆராதன சொரூபமாதலாலும், மெய் - பரம்பொருள் போல் என்றும் ஒரு படியாக இருத்தலாலும், வேதியர் - விழையும் பேறு பரம் பொருளே ஆதலாலும் "வேத நான்கும்... பரமன்" என விளக்குவர் வை.மு.கோ. மனு - கருத்தாவாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Long live the four Vedas and the books that came down from Maṉu,
- the sacrifices, truth, and that which the godly Brahmins long for:
- all these are he with the discus in his lotus hand, the first and supreme one" —
- like the hearts of the ignorant who do not see this, all the quarters grew dark.
What the poem says
Night falls. Kampaṉ compares the gathering dark to the minds of people who fail to see that the Vedas, the law books beginning with Maṉu's, sacrifice, truth, and the final goal the Brahmins long for are all the supreme Lord who holds the discus in his lotus hand.
The commentary, citing a Vaiṣṇava scholar, explains each link: the Vedas reveal his nature, the law books help one grasp the Vedas, sacrifice is his worship, truth is changeless like him, and he himself is the goal the sages seek. The world darkens as an ignorant heart is dark.