கம்பராமாயணம் 8227 · யுத்த 18.180
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாகமே அனைய நம்ப - யானையை ஒத்த வலிமை உள்ள சிறந்தவனே; நாழிகை ஒன்று நான்கு பாகமே காலம் ஆக - நாழிகை ஒன்றில் நான்கில் ஒரு பாகம் ஆகிய கால் நாழிகைக் காலத்தையே (கொல்லற்கு உரிய) காலமாகக் கொண்டு; படுத்தியேல் பட்டான் - கொன்றாய் ஆனால் இவ்விந்திரசித்து இறப்பான்; அன்றேல் - அவ்வாறு செய்யாவிட்டால்; வேகவாள் அரக்கர் காலம் விளைந்தது - விரைவாகச் செயல்படும் கொடிய அரக்கர்க்கு (மாயையைச் செய்தற்கு உரிய) இராக்காலம் வந்துவிடும்; வஞ்சன் விசும்பில் ஏகுமேல் - வஞ்சனைப் பண்புள்ள இந்த இந்திரசித்தன், ஆகாயத்தில் (மாயை விளைக்கச்) செல்வானாயின்; வெல்வன் - வெற்றி பெறுவான்; என்பது - என்ற செய்தியை; இராவணற்கு இளவல் சொன்னான் - இராவணனுக்குத் தம்பியாகிய வீடணன் (இலக்குவனுக்குச்) சொன்னான்.
நாகம் - இலக்குவனின் அவதாரத்தை உட்கொண்டு கூறினார் எனக் கொண்டு பாம்பு எனப்பொருள் கூறினும் அமையும். பின்னர் நாகபாசம் வருவதற்கேற்ப இங்கே இலக்குவனை "நாகமே அனைய நம்ப" என்று அழைத்த நயம் உணர்க. நாழிகை ஒன்று நான்கு பாகமே - கால் நாழிகைப் பொழுது, அரக்கர்காலம் - அரக்கர்க்குரிய இரவுக்காலம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Lord, mighty as an elephant! If you kill him within the space of
- one quarter of a single nāḻikai, he dies; if not,
- the hour of the swift, sword-bearing demons has come; if the deceiver
- goes up into the sky, he will win," said Irāvaṇaṉ's younger brother.
What the poem says
As night falls, Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's younger brother who has joined Irāmaṉ, warns Ilakkuvaṉ. He has about six minutes, a quarter of a nāḻikai, to kill Intiracittu. Night is the demons' time of power, and if the deceiver takes to the sky to work his sorcery he will prevail.
The commentary notes that nākam means both elephant and serpent. Read as "serpent", it hints at Ilakkuvaṉ as the incarnation of Ādiśeṣa, the cosmic snake, and fittingly foreshadows the serpent-noose (nākapācam) about to bind him.