கம்பராமாயணம் 8229 · யுத்த 18.182
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழிந்த தேர் அழுந்தா முன்னம் - (இலக்குவன் அம்பினால்) அழித்த தேர் நிலத்தில் விழுந்து அழுந்துவதற்கு முன்பே (இந்திரசித்தன்); பாசத்தால் பிணிப்பின் என்னா - (யான் இவர்களை) நாக பாசத்தால் பிணித்துவிட்டால்; அம்பொடு கிடந்து வெம்பி - அம்பினால் கட்டப்பட்டுத் தவித்து; உழைத்து உயிர் விடுவது அல்லால் - வருந்தி உயிரை இழந்து விடுவது அல்லாமல்; உறு செரு வென்றேம் என்று - பெரிய போரில் வெற்றி பெற்றோம் என்று எண்ணிக்கொண்டு; இவர் பிழைத்து போவர் அல்லர் - இவர்கள் (உயிர்) தப்பிப் பிழைத்துச் செல்ல மாட்டார்கள்; என்னா - என்று எண்ணி; விழித்து இமையாத முன்னம் - கண் விழித்து இமையாததற்கு முன்பே (கண் மூடித் திறப்பதற்குள்); வில்லொடும் விசும்பில் சென்றான் - தன் வில்லோடு ஆகாயத்துக்குச் சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Before the wrecked chariot sinks into the ground: if I bind them with the noose,
- rather than lying with the arrows, burning, struggling and giving up their lives,
- thinking 'We have won the great battle,' they will not
- escape alive," he thought, and before an eye could blink he went into the sky with his bow.
What the poem says
Before his shattered chariot even hits the ground, Intiracittu forms a plan. If he binds his enemies with the serpent-noose, they will not walk away thinking they have won; they will lie writhing in its grip until they die.
Faster than a blink, he rises into the sky with his bow.