கம்பராமாயணம் 8230 · யுத்த 18.183
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன் குலாம் மேனி மைந்தன் - பொன்னை ஒத்த மேனி நிறமுடைய இலக்குவன்; தன்னொடும் - தன்னுடன்; புகழ்வதற்கு ஒத்த - புகழ்ந்து கூறுவதற்கு உரிய; வன் கலாம் இயற்றி நின்றான் - வலிய போரினைச் செய்து நின்ற, மின்குலாம் கழல் கால் வீரன் - ஒளி விளங்குகிற வீரக்கழலை அணிந்த கால்களை உடைய வீரனாகிய (இந்திரசித்தன்); மற்றொரு மனத்தன் ஆகி - வேறு ஒரு மனத்தை உடையவனாக; விண்ணிடை விரைந்த தன்மை - ஆகாயத்துக்கு விரைவாகச் சென்ற தன்மை; என் கொலாம் - என்ன காரணத்துக்காகவோ; என்ன அஞ்சி - என்று அச்சம் கொண்டு; வானவர் இரியல் போனார் - தேவர்கள் சிதறி ஓடிப் போனார்கள்.
புகழ்வதற்கு ஒத்த வன்கலாம் - ஒத்த சமமான வலிய போர். மற்றொரு மனம் - மாறிய மனம், கொல் - ஐயப் பொருள் தருவதோர் இடைச்சொல். ஆம் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He who stood waging a fierce fight with the gold-bodied youth, a fight worthy of praise,
- the hero with gleaming anklets on his feet, has turned his mind to something else
- and sped into the sky; why can that be!" — so saying,
- the gods took fright and scattered.
What the poem says
The gods watching from the heavens see Intiracittu suddenly break off his evenly matched duel with the golden-skinned Ilakkuvaṉ and shoot up into the sky.
Suspecting a new and sinister purpose, they scatter in fear. The commentary notes that the particle kol expresses their doubt and unease.