கம்பராமாயணம் 8231 · யுத்த 18.184

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வில்தாங்கு கரத்தன் - வில்லைத் தாங்கிய கைகளை உடையவனும்; தூணி தழுவிய புறத்தன் - அம்பு அறாத தூணியைக் கட்டிய முதுகினை உடையவனும்; தன்னுள் ஓங்கி உற்று எரியா நின்ற வெகுளியன் - இயல்பாகவே தன் மனத்தினுள் பொங்கி எரிகின்ற சினத்தை உடையவனும்; உயிர்ப்பன் - பெரு மூச்சு விடுபவனும், தீயன் - கொடியவனும்; தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் - தீங்கு செய்பவர்களில் எல்லாம் தலை சிறந்தவனும்; மாயச் செல்வன் - மாயத்தைச் செல்வமாகவே கொண்டவனும் ஆகிய இந்திரசித்தன்; வீங்கு இருட் பிழம்பின் - நெருங்கிய இருட்டின் திரட்சியில்; (மறைந்து சென்ற) உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் - ஆகாயத்தில் உள்ள மேகத்தின் மேல் செல்பவன் ஆனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the bow held in his hand, the quiver strapped to his back,
  2. with anger rising and blazing within him, hissing breath,
  3. cruel, foremost among all who work harm, rich in sorcery,
  4. he went up in a swelling mass of darkness above the clouds.

What the poem says

A portrait of Intiracittu as he rises: bow in hand, quiver on his back, seething with an anger that is part of his nature, breathing hard. The poet calls him cruel, the chief of all evildoers, a prince whose wealth is magic.

Hidden in the thick darkness, he climbs above the clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṅku vil karattaṉ tūṇi taḻuviya puṟattaṉ taṉṉuḷ
ōṅki uṟṟu eriyāniṉṟa vekuḷiyaṉ uyirppaṉ tīyaṉ,
tīṅku iḻaippavarkaṭku ellām cīriyaṉ, māyac celvaṉ,
vīṅku iruṭ piḻampiṉ, umpar mēkattiṉ mītiṉ āṉāṉ.