கம்பராமாயணம் 8232 · யுத்த 18.185

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மணி நிறத்து அரக்கன் - நீலமணி போன்ற கருநிறத்தை உடைய அரக்கனாகிய இந்திரசித்தன்; பண்டு - முன்பு; தணிவு அற - குறைவு இல்லாமல்; செய்த தவத்தினும் - செய்த தவத்தினாலும்; தருமத்தானும் - (முன்பு செய்த) அறத்தினாலும்; பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் - பாசப் பிணிப்பை ஒழிப்பவர்களாகிய பிரமன் முதலியோர் இடத்தில் பெற்ற வரத்தினாலும்; பிறப்பினானும் - (தன் அரக்க குலத்துக்கு உரிய) பிறவிப் பண்பினாலும்; செய்த மந்திரத்தினாலும் - ஓதிய மாய மந்திரங்களின் வலிமையினாலும்; ஆங்கு - அப்பொழுது; அணு எனச் சிறியது - அணு என்று கூறுமாறு சிறியதாகிய; ஓர் ஆக்கையும் - ஓர் உடம்பினை; உடையன் ஆனான் - உடையவனானான்.

அனுமன் பேருருக் கொள்ளல், சுகசாரணர் வேறு உருக் கொள்ளல், இந்திரசித்தன் நுண்ணிய உருக் கொள்ளல் போன்ற உருப்பெருக்கம், மற்றும் உரு மாற்ற உத்தி கம்பரது இராமாவதாரத்தில் அமைந்து உள்ள நுட்பத்தை எண்ணுக. தமிழ்க்காப்பியங்களில் உருப்பெருக்கமும் உருமாற்றமும் பற்றி எண்ணிப் பார்ப்பது சிந்தனைக்கு விருந்தாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through the penance he had done of old without slackening, through his merit,
  2. through the boons he had gained from those who cut the bonds of birth, through his birth,
  3. and through the magic spells the jewel-dark demon had worked,
  4. he took on there a body as small as an atom.

What the poem says

Intiracittu, dark as a sapphire, shrinks his body to the size of an atom. The poet lists the sources of this power: his earlier penance and merit, boons from Brahmā and the other gods who free beings from bondage, his demon birth, and magic spells.

The commentary points out how often Kampaṉ uses changes of size and shape: Aṉumaṉ growing huge, the spies Cukaṉ and Cāraṇaṉ taking other forms, and now Intiracittu shrinking to almost nothing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṇivu aṟap paṇṭu ceyta tavattiṉum, tarumattāṉum,
piṇi aṟuppavaril peṟṟa varattiṉum, piṟappiṉāṉum,
maṇi niṟattu arakkaṉ ceyta māya mantirattiṉāṉum,
aṇu eṉac ciṟiyatu āṅku ōr ākkaiyum uṭaiyaṉ āṉāṉ.