கம்பராமாயணம் 8234 · யுத்த 18.187

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயின காலத்து - அவ்வாறு ஆன அக்காலத்தில்; வானர வீரர் போல்வார் - வானர வீரர்களைப் போன்றவர்கள்; அமர்த்தொழில் அஞ்சி அப்பால் போயினன் என்பது உன்னி - (இந்திரசித்தன்) போர்த்தொழில் செய்வதற்கு அஞ்சி அப்பால் மறைந்து போய் விட்டான் என்று நினைத்து; ஆர்த்தார் - மகிழ்ச்சிப் பேரொலி செய்தார்கள்; நாயகற்கு இளைய கோவும் - தலைவனாகிய இராமனுக்கு இளையவனாகிய இலக்குவனும்; அன்னதே நினைந்து நக்கான் - அவ்வாறே நினைத்துச் சிரித்தான்; மாயையைத் தெரிய உன்னார் - (அவர்கள் இந்திரசித்தனது) மாயச் செயலைத் தெளிவாக எண்ணிப் பாராதவர்களாய்; போர்த் தொழில் மாற்றி நின்றார் - போர் செய்யும் தொழிலை மாற்றி நின்றார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment the monkey warriors and their like shouted for joy,
  2. thinking, "Afraid of battle, he has gone away";
  3. the younger brother of the lord thought the same, and laughed;
  4. not thinking clearly of sorcery, they stood and gave up fighting.

What the poem says

Not seeing Intiracittu, the monkeys assume he has fled in fear, and they cheer. Ilakkuvaṉ thinks so too and laughs.

None of them suspects magic, and they stop fighting. The poet's comment marks the moment of fatal overconfidence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiṉa kālattu ārttār, ‘amarttoḻil añci, appāl
pōyiṉaṉ ‘eṉpatu uṉṉi, vāṉara vīrar pōlvār;
nāyakaṟku iḷaiya kōvum aṉṉatē niṉaintu, nakkāṉ;
māyaiyait teriya uṉṉār, pōrt toḻil māṟṟi niṉṟār