கம்பராமாயணம் 8237 · யுத்த 18.190

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

யாவையும் எதிர்ந்த போதும் - எல்லா உலகங்களும் உயிர்களும் ஒருங்கு திரண்டு (தன்னை) எதிர்த்த காலத்திலும்; மறுகுறக் கடவான் அல்லன் - மனக் கலக்கம் அடையத் தக்கவன் அல்லவனும்; உறு குறைத்துன்பம் இல்லான் - மனத்தில் மிக்க குறையாகிய துன்பம் இல்லாதவனுமாகிய இலக்குவன்; இறுகுறப் பிணித்தலோடும் - இந்திரசித்தன் செலுத்திய நாகக்கணை (தன்னை) இறுக்கமாகக் கட்டிய அளவில்; மாயம் என்று உணர்வான் அல்லன் - (இது இந்திரசித்தனது) மாயச்செயல் என்று உணராதவனாய்; செய்வது ஓரான் - இன்னது செய்வது என்று தெரியாமல்; ஒடுங்கினன் - வலி குன்றியவனாகி; அறு குறைக்களத்தை நோக்கி - அறுபட்ட உடல் குறைகள் சிதறிக் கிடக்கும் போர்க்களத்தைப் பார்த்து; அந்தரம் அதனை நோக்கும் - அதற்குப் பின்பு ஆகாயத்தையும் பார்ப்பானாயினன்.

உறுகுறைத் துன்பம் - போரில் துன்புறுத்தலாகிய குறையால் வரும் மிக்க துன்பம். களத்தையும் அந்தரத்தையும் நோக்கல் - தான் கட்டப்பட்டது போர்க்களத்தில் உயிருடன் இருந்த அரக்க வீரர்களாலா? அல்லது வானத்தில் மறைந்த இந்திர சித்தனாலா? என்று அறியப் பார்த்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As it bound him fast, he who would not be shaken
  2. even if all things rose against him did not know it for sorcery;
  3. he who knew no grief of failing shrank and, not knowing what to do,
  4. looked at the field of severed bodies, and then looked up at the sky.

What the poem says

The serpent-noose tightens round Ilakkuvaṉ. He, who would stay calm if the whole universe attacked him, does not realise that this is Intiracittu's magic, and he cannot tell what to do.

He looks first at the battlefield and then at the sky. The commentary explains that he is trying to work out whether it was demons still alive on the field or the vanished Intiracittu above who bound him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟukuṟap piṇittalōṭum, yāvaiyum etirnta pōtum
maṟukuṟak kaṭavāṉ allaṉ; māyam eṉṟu uṇarvāṉ allaṉ;
uṟu kuṟait tuṉpam illāṉ; oṭuṅkiṉaṉ; ceyvatu ōrāṉ,
aṟukuṟaik kaḷattai nōkki, antaram ataṉai nōkkum.