கம்பராமாயணம் 8238 · யுத்த 18.191

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காலுடைச் சிறுவன், ‘மாயக் கள்வனைக் கணத்தின் காலை
மேல் விசைத்து எழுந்து நாடிப் பிடிப்பென் ‘என்று உறுக்கும் வேலை,
ஏல்புடைப் பாசம், மேல் நாள் இராவணன் புயத்தை வாலி
வால் பிணித் தென்ன, சுற்றிப் பிணித்ததும், வயிரத் தோளை.

பொருள் · Meaning in Tamil

காலுடைச் சிறுவன் - காற்றின் வேந்தற்கு (அஞ்சனை வயிற்றின் வந்த) மகனாகிய அனுமன்; மாயக் கள்ளனை - (இப்படி) மாயைச் செயல் செய்த கள்ளத்தன்மை உடையவனை; கணத்தின் - கணப்பொழுதில்; காலை மேல் விசைத்து எழுந்து - காலினை மேலூன்றி வானத்தில் வேகமாக எழுந்து; நாடிப் பிடிப்பென் என்று - தேடிப்பிடிப்பேன் என்று; உறுக்கும் வேலை - சினங்கொள்ளும் வேளையில்; ஏல்புடைப் பாசம் - எதிர்த்துத் தாக்கும் தன்மை உள்ள (அந்த) நாகக் கணை; மேல்நாள் - முன்னொரு காலத்தில்; இராவணன் புயத்தை - இராவணனது தோள்களை; வாலி வால் பிணித்தென்ன - வாலியினது வால் சுற்றிப் பிணித்தது போல்; வயிரத்தோளை - அனுமனது உறுதியான தோள்களைச்; சுற்றிப் பிணித்தது - சுற்றிக் கட்டியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of the Wind, saying, "In an instant I will spring up
  2. high, seek out that sorcerous thief and seize him," was raging, when
  3. the hostile noose, just as long ago Vālī's tail
  4. had bound Irāvaṇaṉ's arms, coiled round his diamond-hard shoulders and bound them.

What the poem says

Aṉumaṉ, son of the Wind, prepares to leap into the sky and hunt down the hidden sorcerer, but the noose gets him too and coils round his shoulders.

The simile recalls an old story: Vālī once caught Irāvaṇaṉ in his tail and carried him round the oceans. Now the demon's son's weapon binds a monkey hero in the same way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāluṭaic ciṟuvaṉ, ‘māyak kaḷvaṉaik kaṇattiṉkālai
mēl vicaittu eḻuntu nāṭip piṭippeṉ ‘eṉṟu uṟukkumvēlai,
ēlpuṭaip pācam, mēlnāḷ irāvaṇaṉ puyattai vāli
vāl piṇitteṉṉa, cuṟṟip piṇittatu, vayirat tōḷai.