கம்பராமாயணம் 8242 · யுத்த 18.195
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இது தீர்க்க வல்லார் ஆர் - (அந்த வானர வீரர்கள்) இந்தத் துன்பத்தை நீக்கும் வலிமை உடையவர் யாவர்? (என எண்ணி உடனே); அஞ்சனை பயந்த வள்ளல் மாருதி - அஞ்சனை வயிற்றில் வந்தவன் வள்ளன்மைப் பண்புடைய அனுமன்; பிழைத்தான் கொல்லோ? என்றனர் - (இப்பொழுது) உயிர் தப்பிப் பிழைத்துள்ளான் கொல்லோ என்று கூறியவர்களாய்; மறுகி நோக்கி - (கட்டுண்டு கிடந்த இலக்குவனை) மனம் கலங்கிப் பார்த்து; வீரனைக் கண்டு "பட்டது இது கொலாம்" என்று விம்மி - இலக்குவனைக் கண்டு நடந்த செயல் இதுவோ என்று கூறிப் புலம்பி; வள்ளல் - (வள்ளல் பண்புடைய) இராமன்; வார் கழல் தம்பி தன்மை காணுமோ - நீண்ட வீரக்கழல் அணிந்த (தன்) தம்பியாகிய இலக்குவனுக்கு ஏற்பட்ட இந்நிலையைக் கண்டு (மனம்) பொறுப்பானோ?; என்பார் - என்று கூறினார்கள்.
ஆர் இது தீர்க்க வல்லார் என்று எண்ணிய வானர வீரர் மாருதி பிழைத்தான் கொல்லோ என்றது மாருதியால் தங்கள் துயரம் தீரும் என அவர்களது நம்பிக்கையைக் காட்டுகிறது. வீடணன் முகத்தை நோக்கி வினை உண்டோ? என்று கேட்டமையை முன்பாடலில் குறிப்பிட்ட கம்பர் வீடணனும் மாருதியும் இத்தகைய துன்பத்தில் இருந்து இளைய கோவையும் வானர வீரரையும் மீட்பதற்கு உரிய தன்மை பெற்றவர் என்பதை உணர்த்தி உள்ளமை ஓர்ந்து அறிக, வள்ளல் தம்பி நிலையைக் கண்டால் உயிர் தரித்து இருப்பானோ என்ற ஐயத்தால், தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்றார் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Who is able to end this? Has Aṉjaṉai's generous son,
- Māruti, survived?" they said, and looking round in distress
- and seeing the hero, they sobbed, "So this is what has happened!"
- and said, "Will the generous one bear to see the state of his brother with the long anklets?"
What the poem says
The monkeys wonder who can save them and ask whether Aṉumaṉ, son of Añjaṉai, is still alive. Their hope turns to him. Then, seeing Ilakkuvaṉ bound, they weep and ask whether Irāmaṉ could live through seeing his brother like this.
The commentary observes that by having the monkeys look to Vīṭaṇaṉ in the previous verse and to Aṉumaṉ here, Kampaṉ quietly signals the two who will in fact be able to help.