கம்பராமாயணம் 8243 · யுத்த 18.196

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என், சென்ற தன்மை சொல்லின்? எறுழ் வலி அரக்கன் எய்தான்,
மின் சென்றது அன்ன; வானத்து உரும் இனம் வீழ்வ என்ன,
பொன் சென்ற வடிம்பின் வாளி, புகையொடு பொறியும் சிந்தி,
முன்சென்ற முதுகில் பாய, பின் சென்ற மார்பம் உற்ற.

பொருள் · Meaning in Tamil

சென்ற தன்மை சொல்லி என் - (அம்பு எய்த காலத்தில்) நிகழ்ந்த செயல்களை விரிவாகச் சொல்லி என்ன பயன்?; எறுழ் வலி அரக்கன் - மிக்க வலிமை உடைய இந்திரசித்தன்; வானத்து மின் சென்றது என்ன - வானத்தில் மின்னல் மின்னுவது போன்றனவும்; உரும் இனம் வீழ்வ என்ன - இடியின் கூட்டங்கள் (ஒருங்கே) கீழே விழுவது போலவும்; பொன் சென்ற வடிம்பின் வாளி எய்தான் - கரும் பொன்னால் ஆகிய நுனியை உடைய அம்புகளைச் செலுத்தினான்; புகையொடு பொறியும் சிந்தி - (அந்த அம்புகள்) புகையையும் தீப்பொறிகளையும் சிந்திக்கொண்டு; முன் சென்ற முதுகில் பாய - மார்பில் தைத்தவை முதுகில் ஊடுருவ; பின் சென்ற மார்பம் உற்ற - முதுகில் பாய்ந்தவை மார்பில் ஊடுருவின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What use telling how it went? The demon of overwhelming strength shot
  2. arrows like lightning flashing, like a host of thunderbolts falling from the sky,
  3. arrows with gold-tipped heads, scattering smoke and sparks;
  4. those that went in front pierced to the back, those that went behind reached the chest.

What the poem says

The poet cuts short the detail of what followed. From his hiding place in the sky, Intiracittu fires arrows like lightning and thunderbolts at the helpless, bound warriors.

Arrows smoking and sparking pass through their bodies, front to back and back to front.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉ, ceṉṟa taṉmai colli? eṟuḻ vali arakkaṉ eytāṉ,
miṉ ceṉṟatu aṉṉa; vāṉattu urum iṉam vīḻva eṉṉa,
poṉ ceṉṟa vaṭimpiṉ vāḷi, pukaiyoṭu poṟiyum cinti,
muṉ ceṉṟa mutukil pāya, piṉ ceṉṟa mārpam uṟṟa.