கம்பராமாயணம் 8244 · யுத்த 18.197

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மலைத் தலை கால மாரி, மறித்து எறி வாடை மோத,
தலைத் தலை மயங்கி வீழும் தன்மையின், தலைகள் சிந்தும்,
கொலைத் தலை வாளி பாயக் குன்று அன குவவுத் தோளார்
நிலைத்தலைக் குலைந்து சார்ந்தார்; நிமிர்ந்தது, குருதி நீத்தம்.

பொருள் · Meaning in Tamil

மறுத்து எறி வாடை மோத - மடக்கி வீசுகின்ற வாடைக் காற்று மோதுதலினால்; மலைத்தலைக் காலமாரி - மலையில் உள்ள கரிய மேகங்கள்; தலைத்தலை மயங்கி வீழும் - இடந்தோறும் இடந்தோறும் ஒன்றோடு ஒன்று மோதிச் சிந்தி விழும் தன்மை போல; தலைகள் சிந்தும் கொலைத்தலை வாளி பாய - தலைகளை அறுத்துச் சிந்தச் செய்யும் கொல்லும் தன்மை உள்ள அம்புகள் பாய்வதால்; குன்று அன குவவுத் தோளார் - குன்றினை ஒத்த திரண்ட தோள்களை உடைய வானர வீரர்கள்; நிலைத்திலர் - (ஓரிடத்தில்) நிலைத்து இருக்க மாட்டாது; உலைந்து சாய்ந்தார் - வருந்திக் கீழே விழுந்தார்கள்; குருதி நீத்தம் நிமிர்ந்தது - (எங்கும்) இரத்த வெள்ளம் பரவிப் பெருகியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the black rain clouds on a mountain top, struck by the north wind that turns and lashes,
  2. run together in confusion and fall in place after place,
  3. so, as the killing arrows that scatter heads struck them, those with
  4. hill-like, rounded shoulders could not stand; they reeled and fell; a flood of blood rose up.

What the poem says

The monkey warriors fall under the hail of arrows like storm clouds on a mountaintop that are driven together and burst under a fierce north wind.

Their hill-like shoulders give way, they collapse, and a flood of blood spreads over the field.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malaittalaik kāla māri, maṟittu eṟi vāṭai mōta,
talaittalai mayaṅki vīḻum taṉmaiyiṉ, talaikaḷ cintum,
kolaittalai vāḷi pāyak kuṉṟu aṉa kuvavut tōḷār
nilaittilar ulaintu cāyntār; nimirntatu, kuruti nīttam.