கம்பராமாயணம் 8245 · யுத்த 18.198

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத் தூடு
போயின போதும் ஒன்றும் துடித்திலன்; பொறுத்து, மானத்
தீ எரி சிதறும் செங்கண் அஞ்சனை சிங்கம், தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான்.

பொருள் · Meaning in Tamil

பொடித்து மானத் தீ எரி சிதறும் செங்கண் அஞ்சனை சிங்கம் - மான உணர்வினால் தீப்பொறி சிதறுகின்ற சிவந்த கண்களை உடைய அஞ்சனை பெற்ற சிங்கம் போன்றவனாகிய அனுமன்; ஆயிர கோடி மேலும் அம்பு - ஆயிரம் கோடிக்கு மேல் அம்புகள்; தன் ஆகத்தூடு போயின போதும் - தன் மார்பினுள் ஊடுருவிப் போன போதிலும்; ஒன்றும் துடித்திலன் - ஒரு சிறிதும் வருத்தம் அடையவில்லை; தெய்வ நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட - (ஆனால் அவன்) தெய்வத்தலைவனாம் இராமன் தம்பிக்கு நேர்ந்த துன்பம் (தன் நெஞ்சைச் சுட); நடுங்குகின்றான் - மன நடுக்கம் கொள்பவன் ஆனான்.

தன துயரைக் கருதாது இலக்குவனின் துயர் தன் நெஞ்சு சுட அனுமன் வருந்தினன். பாகவதனின் துடிப்பு என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though more than a thousand crore arrows went through his chest,
  2. he did not flinch at all; yet Añjaṉai's lion, whose red eyes
  3. blazed and scattered the fire of pride,
  4. trembled, as the grief that had come to the divine lord's brother burned him.

What the poem says

Aṉumaṉ, the lion born of Añjaṉai, his eyes blazing with wounded pride, takes more than a thousand crore arrows through his chest without a tremor.

What shakes him is the suffering of Ilakkuvaṉ, brother of the divine Irāmaṉ. The commentary calls this the true devotee's distress: he forgets his own pain and feels only the pain of the one he serves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyira kōṭi mēlum ampu taṉ ākattūṭu
pōyiṉa pōtum oṉṟum tuṭittilaṉ; poṭittu, māṉat
tī eri citaṟum ceṅ kaṇ añcaṉai ciṅkam, teyva
nāyakaṉ tampikku uṟṟa tuyar cuṭa naṭuṅkukiṉṟāṉ.