கம்பராமாயணம் 8247 · யுத்த 18.200
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கதிரவன் காதல் மைந்தன் - கதிரவனின் அன்பு மகனாகிய சுக்கிரீவன்; எதிர் எதிர் பகழி தைத்த - எதிர் எதிராக அம்புகள் தைத்ததனால்; இளம் கழல் பசுங்காய் அன்ன யாக்கையன் - இளமையான கழலின் பசுங்காயை ஒத்த உடம்பினை உடையவனாக; எரியும் கண்ணன் - (சினத்தால்) தீ எரியும் கண்களையும்; வெதிர் நெடுங் கானம் என்ன - மூங்கில்கள் நிறைந்த பெரிய காடு எரிவது போல; வேகின்ற மனத்தன் மெய்யன் - பற்றி எரிகிற மனமும் உடம்பும் கொண்டவனாகி; வெம் உதிர கடலுள் - கொடிய குருதிக் கடலுள்; உதிக்கின்றான் - உதயமாகிற, தாதை தனையும் ஒத்தான் - (தன்) தந்தையாகிய கதிரவனையும் போன்று விளங்கினான்.
மேல் முழுதும் அம்பு பட்டுக்கிடக்கும் சுக்கிரீவனுக்கு முட்கள் சுற்றிலும் உள்ள கழற்காய் உவமை. "தந்தையே மகனாகப் பிறக்கிறான்" என்னும் நூல் வழக்குப் பற்றி, சுக்கிரீவனுக்கு அவன் தந்தையான சூரியனை உவமை கூறுதல் பொருந்தும். "தந்தையர் ஒப்பர் மக்கள்" (தொல். பொருள். 145) என்பதும் நோக்குக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Sun's beloved son, his body like a young green kaḻal fruit
- where arrows had pierced him from every side, his eyes burning,
- his heart and body blazing like a long forest of bamboo on fire,
- was like his father too, rising out of a fierce sea of blood.
What the poem says
Cukkirīvaṉ, son of the Sun, lies bristling with arrows like the spiny green fruit of the kaḻal (bonduc) plant. His eyes burn with rage, and his mind and body seem to blaze like a burning bamboo forest.
Red with blood, he looks like his father the sun rising out of a crimson sea. The commentary justifies comparing son to father by the traditional saying that a father is reborn as his son, and cites the Tolkāppiyam rule that children resemble their fathers.