கம்பராமாயணம் 8249 · யுத்த 18.202

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்பு எலாம் கதிர்கள் ஆக - (இலக்குவன் உடம்பில் குத்தி நின்றுள்ள) அம்புகள் எல்லாம் கிரணங்கள் ஆகவும்; ஆக அழிந்து அழிந்து இழியும் செம்புனல் - மார்பில் இருந்து சிறிது சிறிதாகப் பெருகுகிற இரத்தம்; வெயிலின் தோன்ற - வெய்யில் போலத் தோன்ற; திசை இருள் இரிய - திசைகளில் எல்லாம் இருள் நிலை கெட்டு ஓட; சீறிப் பம்பு பேர் ஒளிய நாகம் - சீறி நிறைந்த பெரிய ஒளியை உடைய பாம்பினால்; பற்றிய படிவத்தோடும் - பற்றப்பட்ட உருவத்தோடு தவறிக்கீழே விழுந்த; ஒளியவனேயும் ஒத்தான் - சூரியனையும் ஒத்து இருந்தான்.

அம்புகள் பட்டுக் குருதி வழிய நாகக்கணையால் கட்டுப்பட்டுக் கிடக்கும் இலக்குவனுக்குக் கிரணங்களோடு வெயில் வீசப் பாம்பினால் பற்றப்பட்டு வானத்தில் இருந்து விழுந்த கதிரவன் உவமையாம் என்க. பம்புதல் - நிறைதல். படிவம் - உருவம், எலாம் - இடைக்குறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With every arrow a ray of light, and the red blood that seeped
  2. and trickled down his chest shining like sunlight, driving off
  3. the darkness of the quarters, in the body seized by the hissing, brilliant serpent,
  4. he was like the Sun himself fallen down from the realm of the gods.

What the poem says

Ilakkuvaṉ, bound and bleeding, is compared to the sun. The arrows sticking out of him are its rays, the blood flowing down is its light, and the glowing serpent coiled round him recalls the eclipse-serpent that is said to seize the sun.

He is like the sun fallen out of the sky in the serpent's grip. The commentary notes that his brilliance even drives back the darkness of the night.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ampu elām katirkaḷ āka, aḻintu aḻintu iḻiyum ākac
cem puṉal veyilil tōṉṟa, ticai iruḷ iriya, cīṟip
pampu pēr oḷiya, nākam, paṟṟiya paṭivattōṭum
umpar nāṭu iḻintu vīḻnta oḷiyavaṉēyum ottāṉ.