கம்பராமாயணம் 8250 · யுத்த 18.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வள்ளல் தம்பி மயங்கினான் - வள்ளலாகிய இராமன் தம்பியாகிய இலக்குவன் மயங்கி விட்டான்; மற்றையோர் முற்றும் மண்ணை முயங்கினார் - மற்றையவர்கள் எல்லோரும் நிலத்தைத் தழுவினார்கள்; மேனி எல்லாம் மூடினான் - (அவர்களின்) உடம்புகளை எல்லாம் (தன் கை அம்புகளால்) மறைத்தவனாகிய; மூரித் தயங்கு பேர் ஆற்றலானும் அரக்கன் - வலிமை விளங்குகிற பெரிய ஆற்றலை உடைய அரக்கனாகிய இந்திரசித்தனும்; தன் உடல் தைத்த வாளிக்கு - தன் உடலினிடத்தில் போரின் போது தைத்துள்ள (இலக்குவனது) அம்புகளுக்கு; உயங்கினான் உளைந்தான் - தளர்ந்து வருந்தினான்; வாயால் உதிரநீர் உமிழா நின்றான் - வாயினால் இரத்தமாகிய நீரைக் கக்கிக்கொண்டு நின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The generous one's brother swooned; all the others
- embraced the earth; the demon who had covered all their bodies,
- he of shining, overwhelming strength, also suffered from the arrows
- lodged in his own body; he was in pain, spitting blood from his mouth.
What the poem says
Ilakkuvaṉ is unconscious and the monkey warriors lie flat on the ground. Intiracittu, who has buried all their bodies under his arrows, is also badly hurt by the arrows Ilakkuvaṉ lodged in him during the duel.
He stands in pain, coughing up blood.