கம்பராமாயணம் 825 · பால 13.21

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பரியின் பந்தி - குதிரைக் கூட்டங்கள்; சூர் உடை நிலை என - தெய்வத்தின் தன்மை போலவும்; தோய்ந்தும் தோய்கிலா - வெளியில் அன்பர்போலக் காட்டியும் (அகத்தில்) அன்பு கொள்ளாத; வார் உடை வனமுலை - கச்சு அணிந்த அழகிய தனங்களையுடைய; மகளிர் சிந்தைபோல் - (விலை) மகளிர் மனம் போலவும்; தாரொடும் சதியொடும் - கழுத்தில் அணிந்துள்ள கிண்கிணி மாலையின் ஒலியோடும்; தாவுமாயினும் - அடிவைத்துத் தாவிப் பாயுமாயினும், பாரிடை மிதிக்கில - பூமியில் பொருந்தாமல் சென்றன.

விலைமகளிரின் சிந்தையானது பெற்ற பொருளளவிற்கு ஏற்பத் தாவிக் கொண்டே இருப்பதுபோலக் குதிரைகளும் ஒரு நிலையில் நில்லாமல் தாவின என்பது. தார் (ஒலி) - ஆகுபெயர் சதி - ஒத்த அடி வைப்பினால் உண்டாகும் ஓசை - ஆகுபெயர்.

குதிரைகள் பூமியின்மேல் செல்லும்போது அவற்றின் பாதங்கள் பூமியிலே படாமல் இருப்பதற்கு தேவதைகளின் பாதம் பூமியில் பதியாமல் இருப்பதையும், வேசியரின் மனம் ஒருவர்மேல் அன்பு கொள்ளாமலே செல்வதையும் உவமையாக்கினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the nature of the gods, who touch the ground and yet never touch it,
  2. like the hearts of women whose fair breasts are bound in bodices, who seem to cling yet never do,
  3. the troops of horses, though they bounded on with jingling garlands and measured beat,
  4. never trod upon the earth.

What the poem says

The horses gallop so lightly that their hooves seem never to touch the ground. Kampaṉ gives two comparisons: the gods, whose feet never rest on the earth, and courtesans, whose hearts seem to attach themselves to a lover but never truly settle on anyone and keep leaping to whoever pays more.

The bells on the horses' necks ring in time with their even stride.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūruṭai nilai eṉat tōyntum tōykilā
vāruṭai vaṉa mulai makaḷir cintaipōl
tāroṭum catiyoṭum tāvum āyiṉum
pāriṭai mitikkila, pariyiṉ pantiyē.