கம்பராமாயணம் 8254 · யுத்த 18.207

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்
சிந்தையின் உணரக் கூறி, ‘தீருதி, இடர் நீ; எந்தாய்!
நொந்தனென் யாக்கை; நொய்தின் ஆற்றி, மேல் நுவல்வென் ‘என்னா,
புந்தியில் அனுக்கம் தீர்ப்பான், தன்னுடைக் கோயில் புக்கான்.

பொருள் · Meaning in Tamil

தந்தையை எய்தி - (இந்திரசித்தன்) தன் தந்தையாகிய இராவணனை அடைந்து; அன்று அங்கு - அன்றைய நாளில் அப்போர்க்களத்தில்; உற்றுள தன்மை எல்லாம் - நடந்துள்ள செய்திகளை எல்லாம்; சிந்தையின் உணரக் கூறி - (அவன்) மனத்தில் பதியும்படி தெளிவாக எடுத்துச் சொல்லி; எந்தாய் - என் தந்தையே; நீ இடர் தீருதி - நீ துன்பம் நீங்குவாயாக (என்று சொல்லி); ஆக்கை நொந்தனென் - யான் உடல் வருந்தினேன்; நொய்தின் ஆற்றி - விரைவாக இளைப்பாறி; மேல் நுவல்வென் என்னா - (இனி) மேல் (செய்யவேண்டியவை பற்றிச்) சொல்லுவேன் என்று கூறி; புந்தியில் அனுக்கம் தீர்வான் - மனத்துன்பம் நீங்குவதற்காக, தன்னுடைக் கோயில் புக்கான் - தனது அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming to his father, he told him all that had happened there that day
  2. so that it sank into his mind; "Be free of your sorrow, my father!
  3. My body is in pain; once I have quickly recovered I will tell you more," he said,
  4. and, to ease the strain in his mind, he went to his own palace.

What the poem says

Intiracittu reports the day's events to Irāvaṇaṉ in full and tells him to put his worries aside.

Saying he is wounded and will explain the rest after a short rest, he goes off to his own palace to recover.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tantaiyai eyti aṉṟu āṅku uṟṟuḷa taṉmai ellām
cintaiyiṉ uṇarak kūṟi, ‘tīruti, iṭar nī; entāy!
nontaṉeṉ ākkai; noytiṉ āṟṟi, mēl nuvalveṉ ‘eṉṉā,
puntiyil aṉukkam tīrppāṉ, taṉṉuṭaik kōyil pukkāṉ.