கம்பராமாயணம் 8255 · யுத்த 18.208
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இத்தலை - (இந்திரசித்தன் கோயில் புக்க நேரத்தில் இராமன் பக்கலில்) இந்தப் பக்கத்தில்; இன்னல் உற்ற வீடணன் - துன்பம் அடைந்த வீடணன்; இழைப்பது ஓரான் - செய்வது என்ன என்று தெரியாதவனாகி; மத்து உறு தயிரின் - மத்தினால் கடையப்பட்ட தயிரினைப்போல; உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் - மனம் கலங்கித் தெளிவு குலைபவனாகி; அத்தலை - அத்தன்மையுள்ள; கொடியன் என்னை அட்டிலன் - கொடிய இந்திரசித்து இவர்களைக் கொன்றது போல் என்னையும் கொன்றானில்லை; நான் அளியத்தேன் - நான் இரங்கத்தக்கவனானேன்; செத்திலென் - (நான்) இறந்தேனு மில்லை; வலியென் நின்றேன் - வலிமை உள்ளவனாய் நின்றிருக்கிறேன்; என்று போய் வையம் சேர்ந்தான் - என்று சொல்லிக் கொண்டு (துயரம் கரை கடந்து) போய் நிலத்தில் விழுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On this side, Vīṭaṇaṉ, in his distress, not knowing what to do,
- his heart churning like curd under the churning stick, was bewildered:
- "That cruel one has not killed me; I am pitiable;
- I have not died; I stand here strong," he said, and went and fell to the earth.
What the poem says
The scene moves back to the battlefield, where Vīṭaṇaṉ alone has escaped the noose. His mind churns like curd under a churning stick.
He laments that the cruel Intiracittu did not kill him along with the others, so he is left alive and whole, a wretched survivor. Overcome, he collapses to the ground.