கம்பராமாயணம் 8257 · யுத்த 18.210

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 “
‘‘
‘‘

பொருள் · Meaning in Tamil

உடனே நின்று அங்கு கொல்வித்தான் என்பரோ - (என்னைப் பற்றி மற்றவர்கள்) (இந்த வீடணன் கூடவே இருந்து அவ்விடத்தில் இலக்குவனை இந்திரசித்தன் மூலம் கொல்லுவித்தான் என்று கூறுவார்களா?; கொண்டு போனான் வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ - (இந்திரசித்தனிடம்) அழைத்துச் சென்று மகனாகிய அவனை வெற்றி பெறும்படிச் செய்து விட்டான் என்று (பழி) கூறுவார்களா?; விளைவிற்கு எல்லாம் நல்வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ - விளைந்த தீமைகளுக்கு எல்லாம் நல்ல விதை போல முன்பே (நல்லவன் போல) (இராமனிடம் வந்து) சேர்ந்து கொண்டான் என்று குறை கூறுவார்களோ?; நயந்தோர்தம் தம் கல்வித்து ஆம் வார்த்தை - (இராமனை) விரும்பும் (உலகத்தவர்) தம் கல்வியின் அளவினை உடையதாய் (அவர்கள் கூறும்) பழிமொழியும் பலவகைப்பட்டு நிற்கும்; என்று - என்று (பலவாறு கூறி); கண் போல் உயிரைக் கரைவித்தான் - கண்களைப் போலவே உயிரையும் கரைந்து உருகச் செய்தான்.

இராமபக்தர்கள் அவன் மீது கொண்ட பேரன்பினால், தங்களுக்குத் தோன்றியவாறு எல்லாம் கூறிப் பழிப்பார்களே என்று பழிக்கு நாணி வீடணன் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனன். கல்வித்து - கல்வியின் அளவினது. (கற்பனைக்குத் தக்கவாறு பேசுவர் என்றபடி).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Will they say, 'He stood right there and had him killed'? Will they declare,
  2. 'He took him off and made the son win'? Will they say, 'Before all this he came,
  3. walking ahead as a good seed for everything that has grown from it'? Those who love him
  4. will speak each as far as their learning goes," he said, and made his life melt away like his eyes.

What the poem says

Vīṭaṇaṉ dreads what Irāmaṉ's followers will say about him. They might claim he stood by and had Ilakkuvaṉ killed through Intiracittu, that he led Ilakkuvaṉ into a trap so that his nephew could win, or that he came over to Irāmaṉ's side as a "seed" planted to produce this disaster.

People devoted to Irāmaṉ, he thinks, will blame him in as many ways as their imaginations allow. As he weeps, his life seems to dissolve along with his tears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“kolvittāṉ, uṭaṉē niṉṟu aṅku “ eṉparō? “koṇṭu pōṉāṉ
velvittāṉ, makaṉai ‘‘ eṉṟu pakarvarō ‘‘viḷaiviṟku ellām
nal vittāy naṭantāṉ muṉṉē ‘‘ eṉparō? nayantōr tamtam
kalvittu ām vārttai ‘eṉṟu karaivittāṉ uyiraik kaṇpōl