கம்பராமாயணம் 8258 · யுத்த 18.211
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவன் போர் புரிந்த போதே - அந்த இந்திரசித்தன் போர் செய்த பொழுதே; பொரு அருவயிரத் தண்டால் - (என்) ஒப்புமை இல்லாத உறுதியான தண்டினால்; தேரொடும் புரண்டு வீழச் சிந்தி - (அவனைத்) தேரோடு புரண்டு விழும் படியாகச் சிதறச் செய்து; என் சிந்தை செப்பும் - என் மனம் (என்னிடம்) கூறுகிற; வீரம் முன் தெரித்தேன் அல்லேன் - வீரச் செயலை முன்பு (செய்து) வெளிக்காட்டினேன் அல்லேன்; விளிந்திலேன் - (அது செய்யவில்லையாயினும் அந்த இந்திரசித்தனால்) இறந்து பட்டேனும் இல்லை; மெலிந்தேன் - (உடலும் உள்ளமும்) தளர்ந்து போனேன்; அளியத்தேன் அழுந்துகின்றேன் - (இப்போது நான்) எளிமை உடையவனாகித் (துன்பத்தில்) மூழ்கியுள்ளேன்; இஞ்ஞான்று - இப்பொழுது; ஆர் உறவு ஆகத் தக்கேன் - நான் யாருக்கு உறவாகத் தக்கவன்?
செயத்தக்க செய்யாமையான் வந்த துயரம் இப்பாடலில் விளக்கப்படுகிறது. ஆர் உறவு ஆகத்தக்கேன் - உலகத்தவர் பழி தூற்றவர் இராவணனிடமும் பகை கொண்டு வந்துவிட்டேன். இராமன் பக்கலில் உள்ளவர்களும் என்மீது ஐயம் கொள்வர். இனி எனக்கு எக்கதியும் இல்லை என்று தன் நிர்க்கதியான நிலையை எண்ணிப் புலம்பியவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "When he was fighting, I did not, with my matchless diamond mace,
- scatter him so that he rolled down with his chariot, and so show the valour
- my heart speaks of; nor have I died; I have only grown weak; now
- whose kin am I fit to be? I am pitiable; I am sinking."
What the poem says
Vīṭaṇaṉ blames himself for not using his mace to knock Intiracittu out of his chariot while he was fighting. He failed to act, yet he did not die either.
The commentary explains his despair: he has made an enemy of his brother Irāvaṇaṉ, and Irāmaṉ's followers may now distrust him, so he belongs nowhere. The verse illustrates the grief that comes from failing to do what ought to have been done.