கம்பராமாயணம் 8259 · யுத்த 18.212

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒத்து அலைத்து, ஒக்க வீடி, உய்வினும் உய்வித்து உள்ளம்
கைத் தலை நெல்லி போலக் காட்டிலேன்; கழிந்தும் இல்லேன்;
அத்தலைக்கு அல்லேன் யான், இன்று ‘அவயம் ‘என்று அடைந்துநின்ற
இத்தலைக்கு அல்லேன்; நின்றேன் இருதலைக் கொள்ளி ஒப்பேன்.

பொருள் · Meaning in Tamil

ஒத்து அலைத்து - (வானர வீரர்களுடன்) ஒப்பாகப் (பகைவர்களை) வருத்தி; ஒக்க வீடி - (அவர்கள் இறக்கும் நிலை வரின் நானும் அவர்களுக்கு) ஒப்பாக இறந்து, உய்வினும் உய்வித்து - (வாழ்ந்து) உய்யும் நெறிகள் (இருப்பின்) யானும் பிழைத்து (அவர்களையும்) பிழைப்பித்து; உள்ளம் - (என் பக்தியுள்ள) மனத்தின் (தன்மையை); கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன் - உள்ளங்கையிடத்தில் உள்ள நெல்லிக்கனி போல விளக்கிக் காட்டினேன் அல்லன்; கழிந்தும் இல்லேன் - (யான்) இறந்து போகவுமில்லை; யான் அத்தலைக்கு அல்லேன் - நான் அவ்விடத்துக்கு (இராவணன் பக்கத்துக்கு) வேண்டாதவனானேன்; ஈண்டு அபயம் என்று அடைந்து நின்று - இங்கு (வந்து) சரண் என்று சேர்ந்து நின்ற; இத்தலைக்கு அல்லேன் அல்லேன் - இந்தப் பக்கத்துக்கும் (இராமன் பக்கத்துக்கும்) வேண்டாதவனானேன்; இருதலைச் சூலம் போல்வேன் - இரண்டு பிரிவாக உள்ள சூலத்தைப் போன்றவனானேன்.

சூலத்தின் முனைகள் ஒன்றிணையாது வேறு வேறாக நிற்றல் போலச் சூலத்தின் கைப்பிடி போன்ற தான் எப்பக்கத்திலும் இணைய முடியாதபடி தனித்து நின்று விட்டேனே என வருந்தியபடி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I did not strike the foe as they did and die as they died, nor, if they could be saved,
  2. save myself and save them, and so show my heart
  3. plain as a gooseberry in the palm of the hand; nor have I perished;
  4. I belong not to that side, nor to this side where I came and stood crying 'Refuge'; I am like a two-pronged trident."

What the poem says

Vīṭaṇaṉ grieves that he neither fought and died alongside the monkeys nor found a way to rescue them and himself, which would have made his loyalty as obvious as a gooseberry held in the open hand, a proverbial image of something plain to see.

He feels he now belongs to neither Irāvaṇaṉ's side nor Irāmaṉ's, where he came seeking refuge. The commentary explains the trident image: the two prongs point in different directions, and the handle, like Vīṭaṇaṉ, is joined to neither.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ottu alaittu, okka vīṭi, uyviṉum uyvittu uḷḷam
kaittalai nelli pōlak kāṭṭilēṉ; kaḻintum illēṉ;
at talaikku allēṉ yāṉ, īṇṭu ‘apayam ‘eṉṟu aṭaintu niṉṟa
it talaikku allēṉ; allēṉ; iru talaic cūlam pōlvēṉ.