கம்பராமாயணம் 8260 · யுத்த 18.213
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனையன பலவும் பன்னி - (இவை போன்ற) பல சொற்களைப் பலமுறை சொல்லி; ஆகுலித்து - (மனத்) துன்பம் கொண்டு; அரற்றுவானை - கதறி அழுகின்றவனாகிய வீடணனை நோக்கி, வீர - வீரனே; பலவும் வினை உள செய்யத் தக்கன - (இப்போது) செய்யக்கூடிய பல (பரிகாரச்) செயல்கள் உள்ளன; நீயும் நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ? - (அச்செயல்களைச் செய்யாமல்) நீ கூட அறிவிலார் போல மனந்தளர்ந்து வருந்துவாயோ? நீத்தி என்னா - (அந்த மனத்தளர்ச்சியை) விட்டுவிடுவாயாக என்று; அனலன் - அனலன் என்பவன்; இனையன சொல்லித் தேற்றி - இத்தகைய சொற்களைச் சொல்லி (வீடணனைத்) தேற்றி; மற்று இனைய செய்தான் - பின்பு இச்செயல்களைச் செய்தான் (செய்தவை அடுத்த பாடலில்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- To him who wailed in anguish, repeating many such words,
- Aṉalaṉ said, "Hero, there are many things that can be done;
- will you too let your heart give way like those who cannot think? Put it aside!"
- and with such words he comforted him, and then did this.
What the poem says
Aṉalaṉ, one of Vīṭaṇaṉ's four demon ministers who came over to Irāmaṉ with him, speaks to his grieving master.
He tells him there are many remedies still open and that a man of Vīṭaṇaṉ's understanding should not collapse like a fool. Having steadied him, Aṉalaṉ acts, as the next verse relates.