கம்பராமாயணம் 8261 · யுத்த 18.214
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீ இவண் இருத்தி - நீ இங்கே இருப்பாயாக; யான் போய் - நான் போய்; நெடியவற்கு உரைப்பென் என்னா - நெடியவனாகிய இராமனுக்கு (நிகழ்ந்தது) கூறுவேன் என்று சொல்லி; அனலன் போயினன் - அனலன் (இராமனிடம்) சென்றான்; போய் - சென்று; அப்புண்ணியன் பொலன்கொள் பாதம் மேயினன் வணங்கி - அப்புண்ணிய உருவினன் ஆகிய இராமனது திருப்பாதத்தில் சேர்ந்து (விழுந்து) வணங்கி; உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் - நடந்த செயல்களை எல்லாம் சொல்லி நின்றான்; ஆயிரம் பெயரினானும் - ஆயிரம் நாமத்து ஐயனாகிய இராமனும் (அது கேட்டு); அருந்துயர்க் கடலுள் ஆழ்ந்தான் - கடத்தற்கு அரிய துன்பக் கடலுள் முழுகினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Stay here; I will go and tell the tall one," he said,
- and Aṉalaṉ went; going, he reached that holy one's golden feet,
- bowed, and stood telling all that had happened;
- and he of a thousand names sank into a sea of bitter grief.
What the poem says
Aṉalaṉ leaves Vīṭaṇaṉ on the field and goes to Irāmaṉ, called "the tall one" (neṭiyavaṉ), recalling Viṣṇu who grew to span the worlds.
He falls at Irāmaṉ's feet and reports what has happened. Irāmaṉ, the Lord of a thousand names, is plunged into an ocean of grief.