கம்பராமாயணம் 8262 · யுத்த 18.215

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன்னை உணர்ந்திலன் - (அனலன் கூறியதைக் கேட்ட இராமன்) தன்னை உணர்ந்திலனாய் (உணர்வு ஒழிந்து); உயிரும் ஓட - உயிர் (தன்னை விட்டு) நீங்கியது போல (மயக்கம் அடைந்ததனால்); ஒன்றும் உரைத்திலன் - ஒன்றையும் (வாயைத் திறந்து) சொல்லாமலும்; கண்ணின் நீரை கரைத்திலன் - கண்களில் இருந்து கண்ணீரை வெளிப்படுத்தாமலும்; யாதும் கண்ணால் கண்டிலன் - யாது ஒன்றையும் கண்ணைத் திறந்து நோக்காமலும்; பொங்கிப் பொங்கி அம் கையால் உலகம் எல்லாம் அரைத்திலன் - மிக்க சினம் கொண்டு (தன்) அழகிய கைகளால் உலகங்களை எல்லாம் அழிக்காமலும்; உளன் என்று எண்ண - கண்டோர் (அவன்) உயிரோடு தான் இருக்கிறான் என்று எண்ணுவதற்காக, விம்மி ஏங்கி இருந்தனன் - விம்மிக் கதறிக் கொண்டு இருந்தான்.

முதல் மூன்று வரிகளில் செய்தியைக் கேட்ட இராமன் எத்தகைய மெய்ப்பாட்டையும் வெளிக்காட்டவில்லை என்று கூறிய கம்பர் இவ்வளவு பெரிய துயரச் செய்தி இராமனிடம் எவ்வகையான பெருந்துன்பத்தையும் ஏற்படுத்தவில்லையே ஒருவேளை அவன் இறந்து பட்டானோ என்று பிறர் எண்ணுவர் என்பது கருதி, உளன் என்று எண்ண விம்மி ஏங்கி இருந்தனன் என்றார் என்க. பெருந்துயரம் தாக்கும் போதும் உணர்வுகளை வெளிக்காட்டாது கற்சிலை போல் இருக்கும் மானிட பாவனையைக் கவிஞர் இராமன் மீது ஏற்றிக் கூறியுள்ளமை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He said nothing; he did not know himself; as though his life were ebbing,
  2. he shed no tears from his eyes; he saw nothing with his eyes;
  3. he did not rise in fury and grind the whole world in his fine hands;
  4. so that they might think, "He lives," he sat sobbing and sighing.

What the poem says

Irāmaṉ hears the news in stunned silence. He neither speaks, weeps, sees, nor rises in rage to crush the world.

The commentary points out the poet's subtlety. After three lines in which Irāmaṉ shows no sign at all, the last says he sobbed so that those around him would know he was still alive. Kampaṉ gives Irāmaṉ the human response to overwhelming grief, sitting frozen like a stone image.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uraittilaṉ oṉṟum taṉṉai uṇarntilaṉ uyirum ōṭak
karaittilaṉ kaṇṇil nīrai kaṇṭilaṉ yātum kaṇṇāl;
araittilaṉ ulakam ellām aṅ kaiyāl paṟṟip poṅki
iraittilaṉ, ‘uḷaṉ ‘eṉṟu eṇṇi iruntaṉaṉ vimmi ēṅki