கம்பராமாயணம் 8263 · யுத்த 18.216
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விம்மினன் - விம்மி; வெதும்பி - (நினைத்து நினைத்து மனம்) கன்றி; வெய்துற்று - பெருமூச்சு விட்டு; ஏங்கினன் - ஏக்கம் உடையவனாய்; இருந்த வீரன் - இருந்த வீரனாகிய இராமன்; இம்முறை இருந்து செய்வது யாவதும் இல் - இவ்வகையில் (புலம்பிக் கொண்டு இருந்து) செய்யத்தக்க செயல் எதுவும் இல்லை; என்று எண்ணி - என்று நினைத்து; பொம்மென - விரைவாக; விம்மலோடும் பொருக்கென விசையின் போனான் - விம்மிக்கொண்டு மிக விரைவாகப் போய்; தெவ் முறை துறந்து வென்ற - பகைவன் (இந்திரசித்தன்) அறமுறை தவறி வெற்றி பெற்ற; செங்கள மருங்கில் சேர்ந்தான் - (குருதியால்) சிவந்த போர்க் களத்திடத்தில் (சென்று) சேர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hero who sat sobbing, burning within, sighing hot breaths and yearning,
- thinking, "There is nothing to be done by sitting here like this,"
- went off at once, sobbing, with sudden speed,
- and reached the side of the red field where the foe had won by forsaking the right way.
What the poem says
Irāmaṉ pulls himself together, realising that sitting and grieving will achieve nothing.
Still sobbing, he hurries to the bloodstained battlefield where Intiracittu has won, not fairly but by abandoning the rules of righteous combat and fighting from hiding.