கம்பராமாயணம் 8264 · யுத்த 18.217
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொங்கு இருட் கங்குற் போர்வை - மிகுதியாகப் பொங்கும் இரவாகிய போர்வை; இழிந்து எழுகாள மேகம் - (நீர் முகக்க) இறங்கி மேல் எழுகிற கரு மேகங்களையும்; எறி கடல் அனைய - (அலைகள்) வீசும் கடல்களையும் அவை போல்வன பிறவற்றையும்; மற்றும் ஒழிந்தன நீலவண்ணம் உள்ளன எல்லாம் - மற்றும் விடுபட்டுப் போன நீலவண்ணம் உள்ளனவாகிய பொருள்கள் எல்லாவற்றையும், ஒக்கப் பிழிந்து - ஒன்று சேர்த்துப் பிழிந்து; அது - (அவ்வாறு பிழிந்த) அப்பொருள்; காலம் ஆகக் - பொழிவதற்கு உரிய காலமாக; காளிமைப் பிழம்பு போதப் - கருமையின் உருவத்தை மிகுதியாக வெளிப்படுமாறு; பொழிந்தது போன்றது அன்றே - பொழிந்தது போன்றது.
உலகம் முழுவதையும் மூடி இருத்தல் பற்றி இருட்டைப் போர்வையாக உருவகப் படுத்திக் கூறியுள்ளார். காளம் - கறுப்பு. இழியும் போது வெண்மேகமாயும் எழும் போது காள மேகமாயும் இருந்ததென்க. காளிமைப்பிழம்பு - கருமையின் வடிவம். அன்று ஏ - அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if the black clouds that come down and rise again, the tossing seas,
- and everything else that is blue in colour, all wrung out together,
- had at its due season poured down so that a mass of blackness
- overflowed: such was the covering of the night's swelling darkness.
What the poem says
The poet describes the night that covers the field. It is as though every dark-blue thing in creation, rain clouds, the seas and the rest, had been squeezed together and its blackness poured over the world.
The commentary notes that the darkness is pictured as a blanket over the whole world, and adds that clouds go down to the sea white and come up dark with water.