கம்பராமாயணம் 8266 · யுத்த 18.219

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

படை உறு பிணத்தின் - படைக்கலங்கள் தைத்த பிணங்களின்; பம்மல் பருப்பதம் துவன்றி - மிகுதி மலைகள் போல நிறைந்து; பல்வேறு இடை உறு குருதி வெள்ளத்து - பல்வேறு விதமாக இடை இடையே மிக்க குருதியாகிய வெள்ளம்; எறி கடல் எழுநீர் பொங்கி - அலைகள் எறியும் கடலின் நீர் போலப் பொங்கி எழுகிற காரணத்தால்; உடை உறு தலைக்கை அண்ணல் - உடைதல் பொருந்திய தலையைக் கையில் ஏந்திய தலைவன் ஆகிய சிவபெருமான்; உயிர் எலாம் ஒருங்க உண்ணும் - உயிர்களை எல்லாம் ஒரு சேர உண்ணுகிற; கடை உறு காலத்து - இறுதி பொருந்திய காலத்தில்; ஆழி உலகு அன்ன - கடலினால் (அழிக்கப்பட்ட) உலகத்தை ஒத்த; களத்தைக் கண்டான் - போர்க்களத்தை (இராமன்) கண்டான்.

சங்காரகாரணனாகிய சிவபெருமான் பிரளய காலத்தில் அனைத்துயிரையும் அழிப்பான் என்பது மரபு வழிக் கொள்கை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With corpses pierced by weapons crowding like heaped mountains, and in between
  2. floods of blood of every kind surging like the water of the wave-tossed sea,
  3. he saw the field like the world sinking at the final time, when the lord who holds
  4. the broken skull in his hand devours all lives at once.

What the poem says

In the light of the fire-weapon Irāmaṉ sees the battlefield: corpses heaped like hills and rivers of blood surging like the sea.

It looks like the world at the end of an age, when Śiva, who carries a skull-cup, swallows all living things and the ocean floods the earth. The commentary notes the traditional belief that Śiva, as destroyer, ends all life at the cosmic dissolution.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭai uṟu piṇattiṉ pammal paruppatam tuvaṉṟi, palvēṟu
iṭai uṟu kuruti veḷḷattu, eṟi kaṭal eḻu nīr poṅki,
uṭai uṟu talaik kai aṇṇal uyir elām oruṅka uṇṇum
kaṭai uṟu kālattu āḻum ulaku aṉṉa kaḷattaik kaṇṭāṉ