கம்பராமாயணம் 8267 · யுத்த 18.220
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் - துர்க்கை மங்கலமாக வாழ்க்கை ன்பம் உரிய) இடமாகிய; மணம் பெரும் களத்தில் - புலால் நாற்றம் வீசுகிற பெரிய போர்க்களத்தில்; பிணப் பெருங் குன்றினூடும் - பிணக் குவியல்களாகிய பெரிய மலைகளுக்கு நடுவிலும்; குருதி நீர்ப் பெருக்கினூடும் - இரத்த வெள்ளப் பெருக்கின் இடையிலும்; நிணப் பெருஞ் சேற்றினூடும் - கொழுப்புகள் (விழுந்து ஆகிய) பெரிய சேற்றுப் (பகுதிக்கு) இடையிலும், படைக்கல நெருக்கினூடும் - (கீழே விழுந்து கிடக்கிற) படைக்கலங்களின் இடையிலும்; கணத்தினும் பாதிப் போதில் - (இராமன்) அரைக்கணத்தில், தம்பியைச் சென்று கண்டான் - தம்பியைச் சென்று பார்த்தான்.
மோடி - துர்க்கை. மோடி மங்கல வாழ்க்கை வைப்பு - போர்க் களத்துக்கு உரிய தெய்வம் காளியாதலின் இவ்வாறு கூறினார். மணப் பெருங்களம் - வீரமகளாகிய துர்க்கையின் திருமணச்சாலை எனலுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Through great hills of corpses, through floods of blood,
- through deep mire of fat, through crowds of fallen weapons,
- on that great reeking field, the home where Mōṭi lives her auspicious life,
- in less than half an instant he went and found his brother.
What the poem says
Irāmaṉ crosses the battlefield, through piles of bodies, pools of blood, mud made of fat and heaps of fallen weapons, and reaches Ilakkuvaṉ in less than half an instant.
The commentary explains that the field is Mōṭi's home: Mōṭi is Durgā, the war goddess who presides over battle and delights in it. The word maṇam can mean a stench, the reek of flesh, or a wedding, so the field can also be read as the goddess's wedding hall.