கம்பராமாயணம் 8270 · யுத்த 18.223
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாமரைக் கையால் தாளைத்தைவரும் - (மேலும் இராமன்) தன் தாமரை போன்ற கைகளினால் (இலக்குவனுடைய) கால்களைத் தடவுவான்; குறங்கைத் தட்டும் - தொடையைத் தட்டுவான்; தூமலர்க் கண்ணை நோக்கும் - (அவனுடைய) தூய தாமரை மலர் போன்ற கண்ணின் (இமைகளைப் பிரித்தும்) பார்ப்பான்; மார்பிடைத் துடிப்பு உண்டு என்னா ஏமுறும் - மார்பில் துடிப்பு உள்ளது என்று சொல்லி மகிழ்வான்; விசும்பை நோக்கும் - விண்ணைப் பார்ப்பான்; எடுக்கும் தன் மார்பில் ஏற்றும் - (அவனைத் தூக்கி) எடுத்துத் தனது மார்பில் அணைத்துக் கொள்ளும்; பூமியில் வளர்த்தும் - நிலத்தில் படுக்கச் செய்யும்; கள்வன் போய் அகன்றானோ என்னும் - (மாயக்) கள்ளனாகிய இந்திரசித்தன் (தப்பிப்) போய் விட்டானோ? என்பான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With his lotus hand he strokes his feet; he pats his thigh;
- he looks into his pure flower eyes; "There is a beat in his chest!" he says,
- and is glad; he looks at the sky; he lifts him; he lays him on his chest;
- he lays him on the earth; "Has the thief gone away?" he says.
What the poem says
The litany of grief continues. Irāmaṉ rubs his brother's feet, pats his thigh and lifts his eyelids to look into his eyes. He cheers up when he thinks he feels a heartbeat, glances up at the sky, holds him to his chest and lays him down again.
He wonders aloud whether the hidden thief, Intiracittu, has fled. The quick, broken actions show a mind in turmoil.