கம்பராமாயணம் 8272 · யுத்த 18.225
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அளவையின் நிமிர நின்றான் - பிரமாணங்களைக் கடந்து நின்றவனாகிய இராமன்; வீரரை எல்லாம் நோக்கும் - (தனக்காகப் போரிட்டு மடிந்து கிடக்கும்) வானர வீரர்களை எல்லாம் பார்ப்பான்; விதியினைப் பார்க்கும் - (தாரத்தையும் தம்பியையும் இழக்கச் செய்த) விதியினைப் பற்றி எண்ணிப் பார்ப்பான்; வீரப் பார வெஞ்சிலையை நோக்கும் - (தக்க தருணத்தில் தனக்கு உதவாத) வீரமுடைய வலிய வில்லினைப் பார்ப்பான்; பகழியை நோக்கும் - (பயன்படாது அம்பு அறாத்தூணியில் உள்ள) அம்புகளைப் பார்ப்பான்; பாரில் என்போல் எளிவந்த வண்ணம் இது பட்டார் யார்? என்னும் - நிலவுலகத்தில் என்னைப் போல எளி வந்த தன்மையாகிய (பெருந்துன்பத்தை) அடைந்தவர் யார்? என்று கூறுவான்; நேரிது பெரிது என்று ஓதும் - என துன்பம் மிக நேரிது பெரியது என்று கூறுவான்.
அளவையின் நிமிர நின்றான் - பசுஞான பாசஞானத்தாலும், காட்சி, கருதல் உரை என்ற அளவைகளாலும் அறிய முடியாதவன் என்றார். அளவை - பொறிகளால் காணும் காட்சி அளவை, உய்த்துணரும் கருதல் அளவை, நூல் அளவை என மூன்றாம். இவற்றை பிரத்தியட்சம், அனுமானம் ஆகமம் என்பர். நேரிது - நேர் இகழ்ச்சிக் குறிப்பு என்பர் வை. மு.கோ.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He looks at all the warriors; he looks at fate; he looks
- at his heavy, fierce, heroic bow; he looks at his arrows; "On earth,
- who has ever come so low as I?" he says;
- "It is fitting, it is great," says he who stands high beyond all means of knowing.
What the poem says
Irāmaṉ looks at the fallen monkey warriors, at the fate that has cost him first his wife and now his brother, and at the bow and arrows that were no help at the crucial moment. He asks who on earth has ever been brought so low.
The commentary explains that Irāmaṉ stands beyond the pramāṇas, perception, inference and scripture, by which things are known, yet he grieves like a man. One scholar takes "it is fitting" as bitter self-mockery.