கம்பராமாயணம் 8274 · யுத்த 18.227
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ் உரை - (இராமன்) அந்தச் சொற்களை; அருளக் கேட்டான் - சொல்லக்கேட்டு; அழுகின்ற அரக்கன் தம்பி - அழுகின்ற இராவணனது தம்பியாகிய வீடணன்; இவ்வழி - இந்தப் போர்க்களத்துக்கு; அவன் வந்து ஏற்பது அறிந்திலம் - அந்த இந்திரசித்தனே வந்து போர் ஏற்பான் என்பதை (நாங்கள்) முன்பே அறிந்திலோம்; எதிர்ந்த போதும் - (அவ்வாறு அவனே வந்து போர்) எதிர்த்த போதும், வெவ்வழியவனே தோற்கும் என்பது - தீய வழியில் செல்லும் (இந்திரசித்தனே) தோற்பான் என்று (எண்ணி); விரும்பி நின்றேன் - விருப்பத்தோடு (போர்க்களத்தில்) நின்றிருந்தேன்; (அதனால் வல்லை உன்னை அழைக்கவில்லை) இந்த மாயச் செய்கை - இந்த மாமாயச் செயல்; தெய்வ வன் பாசம் செய்த செயல் - தெய்வத்தன்மை பொருந்திய வலிமையான நாகக் கணையின் செயலால் விளைந்தது (என்று இராமனை நோக்கிக் கூறினான்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing those words spoken, the demon's brother, weeping,
- said, "We did not know that he would come and fight on this ground; even when he came against us,
- I stood hoping, 'He who walks the cruel path will lose';
- this sorcery is the work of the mighty divine noose."
What the poem says
Vīṭaṇaṉ, in tears, explains. They did not expect Intiracittu himself to come to the field. Even when he did, Vīṭaṇaṉ was confident that the wicked one would be beaten, and so did not hurry to call Irāmaṉ.
The disaster, he says, is not a defeat in fair fight but the work of a divine weapon, the serpent-noose.