கம்பராமாயணம் 8279 · யுத்த 18.232
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழி உலகு எலாம் இருண்டது - கடலால் சூழப்பட்ட நில உலகம் எல்லாம் இருண்டு போனது; வஞ்சன் - வஞ்சனைப் பண்புள்ள (அந்த) இந்திரசித்தன்; மாயத்தால் வானில் போய் - மாயச் செய்கையால் வானத்திற்குப் போய்; அத் தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளித்து - அந்தத் தான் பெற்றுள்ள வஞ்சனைச் செயல் செய்ய உரிய வரத்தின் வலிமையால் மறைந்து (நின்று); பொய்யின் ஆய - பொய்மையால் ஆகிய; தார்ப்பாசம் வீசி - நாகக் கணையை எய்து; அயர்வித்தான் - தளரச் செய்தான்; அம்பின் வெம்பும் காயத்தான் - (இலக்குவனுடைய) அம்புகளால் வெதும்பிய உடலை உடைய அந்த இந்திரசித்தன்; என்னச் சொல்லி - என்று (வீடணன் இராமனிடம்) கூறி; கலுழும் கண்ணான் வணங்கினான் - நீர் வடியும் கண்களை உடையவனாய் வணங்கி நின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Through sorcery the whole sea-girt world grew dark; the deceiver went into the sky,
- hid himself by the deceitful boon he holds, and, casting
- the noose made of falsehood, he laid him low, he whose body burned with the arrows,"
- so he spoke, and bowed, with streaming eyes.
What the poem says
Vīṭaṇaṉ finishes his account. Darkness fell, and Intiracittu, still smarting from Ilakkuvaṉ's arrows, used his boon of trickery to rise into the sky and hide. From there he cast the serpent-noose, a weapon of falsehood, and brought Ilakkuvaṉ down.
Having said this, Vīṭaṇaṉ bows to Irāmaṉ in tears.