கம்பராமாயணம் 828 · பால 13.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழுந்திய உயிர்க்கு எலாம் - (துன்பத்தில்) ஆழ்ந்துள்ள உயிர்களுக்கு எல்லாம்; அருட் கொம்பு ஆயினான் - அருள் புரியும் கொழு கொம்பான தசரதன்; எழுந்திலன் - (இன்னும் அயோத்தியை விட்டு) எழுந்து புறப்படவில்லை; உலகம் எங்கணும் - (அப்படி இருக்கையில்) உலகத்தில் எங்கும்; உழுந்திட இடம் இலை - ஓர் உழுந்துகூடப்போட இடமில்லை (என்று சொல்லும்படி); எழுந்து - (அயோத்தியிலிருந்து) புறப்பட்டு; இடை - (அயோத்தி - மிதிலை) இடையிலே; படரும் - செல்லுகின்ற; சேனையின் கொழுந்து - படையின் முன்னணி; போய் - சென்று; கொடிமதில் மிதிலை - கொடிகள் அசையும் மதில் சூழ்ந்த மிதிலை நகரை; கூடிற்று - அடைந்தது.
புறப்படத் தொடங்கிய தசரதனது முன்னணிச் சேனை மிதிலை நகரை அடைந்தது. உயர்வு நவிற்சியணி.
சேனை முழுவதும் ஒரே காலத்தில் எழுந்தால் அயோத்தியிலிருந்து மிதிலை வரையிலும் நின்றாலும் நிற்க இடம் போதாது என்றார்.
உழுந்திட இடமிலை என்றது சேனையின் நெருக்கம் கூறியது. சேனையின் கொழுந்து - முன்சேனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There was no room to drop a single gram seed anywhere in the world;
- he who was a prop of grace to every suffering creature
- had not yet set out; and yet the vanguard of the army that rose and spread along the road
- had already reached Mithilai of the bannered walls.
What the poem says
An exaggeration to show the army's size. Tacarataṉ himself, the support on which every suffering creature leans as a vine leans on its stake, has not even left Ayōttī, yet the front of his army has already arrived at Mithilā.
The whole road between the two cities is packed so tight that there is not room to drop a single grain.