கம்பராமாயணம் 829 · பால 13.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண்டவர் மனங்கள் - (தம்மைப்) பார்த்த ஆடவரின் மனம்; காதலின் கைகோப்ப - காதலால் கலக்க; பண்திகழ் பரிசின் - பூட்டு விளங்குகின்ற தன்மையோடு; செல்வன - செல்லுகின்ற; பண்டிகள் - வண்டிகள்; வண்டு இமிர் கோதையர் - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய மகளிரின்; வதன ராசியால் - முகங்களது கூட்டத்தால், புண்டரீகம் தடம் போவ - தாமரை மலர்ந்த தடாகங்கள் செல்வதை; போன்ற - ஒத்தன.
வண்டியில் செல்லும் மகளிரின் முகங்கள் பூத்த தாமரைகள் போல் விளங்கின. அதனால் வண்டி செல்வது தாமரைத் தடாகமே போவது போன்றது என்றார். தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Making the hearts of all who saw them join hands with love,
- with their clusters of faces of women whose garlands hum with bees,
- the carts, well yoked and rolling along in fine order,
- looked like lotus pools on the move.
What the poem says
Carts full of women roll along in the procession. Their lovely faces, crowded together, look like lotuses in bloom, so each cart seems like a lotus pond travelling down the road.
Every man who sees them is captivated, his heart going out to them.