கம்பராமாயணம் 830 · பால 13.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாண்டிலின் வைத்த - வண்டியில் ஏற்றப்பட்ட; ஓர் பாவை - ஒரு பெண்; ஈண்டிய அன்பினோடு - நெருக்கமான அன்பு கொண்டவனாக, தன்னொடும் ஏகுவான் - தன்னோடு ஓடி வருகின்ற இளையவனை; இடை காண்டலும் - இடை வழியிலே தன் பார்வையைச் செலுத்தவும்; நோக்கிய - (அவனைப்) பார்த்த; கடைக்கண் - அந்தக் கடைக்கண்ணினது; அஞ்சனம் - மையானது; ஆண் தகைக்கு - (அப் பெண்ணால் பார்க்கப் பெற்ற) அந்த ஆடவனுக்கு; இனியது - இனிமையான; ஓர் அமுதம் - சிறந்த அமுதம்; ஆயது - ஆயிற்று.
ஓர் ஆண்மகன் ஒருத்தியை வண்டியில் ஏற்றிவிட்டு அதன்பின்னாலே ஓடிவருகிறான்; அவன் மேல் அவள் தன்கடைக்கண் பார்வையைச் செலுத்துகின்றாள்; அவன் அப் பார்வையைக் கண்டது அவனுக்கு அமுதத்தை உண்டதுபோன்று இருந்தது என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A girl seated in a cart, when on the way she glanced at the one
- who kept pace beside her, full of crowding love,
- the kohl at the corner of the eye with which she looked
- became a sweet nectar to that manly youth.
What the poem says
A small scene within the procession. A young man has helped his beloved into a cart and runs along beside it. On the way she gives him a sidelong look.
The kohl-darkened corner of her eye, turned on him, is like nectar to him: one glance is enough to make him happy.