கம்பராமாயணம் 8282 · யுத்த 18.235
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழி அம் செல்வ! - சக்கரப்படையை ஏந்திய அழகிய செல்வனே! பண்டு இவ் அகலிடம் அளித்த அண்ணல் - முற்காலத்தில் இந்த அகன்ற உலகத்தைப் படைத்த பிரமன்; வேள்வியில் படைத்தது - வேள்வி செய்து உருவாக்கியது; ஈசன் வேண்டினன் பெற்று - அவனிடம் இருந்து சிவபிரான் (அதை) வேண்டிப் பெற்று; வெற்றித் தாழ்வு உறு சிந்தையோற்குத் - வெற்றியை உடைய தாழ்வில்லாத மனத்தை உடைய இந்திரசித்தனுக்கு; தவத்தினால் அளித்தது - (அவன் செய்த) தவத்துக்காகக் கொடுத்தது; ஆணை - (இது முற்றிலும்) உண்மை; ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது - ஊழி முடிவுக் காலத்து இடி போன்றது; ஊற்றம் ஈதால் - (இதன்) வலிமை இப்படி உள்ளதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Lord of the fair discus! Long ago the lord who brought forth this wide world
- made it in a sacrifice; Īcaṉ begged for it and received it, and to the one
- of victorious, unbending mind he gave it for his penance; I swear it!
- It is like the thunderbolt that rises at the end of an age; such is its might."
What the poem says
Vīṭaṇaṉ tells the noose's history. Brahmā, creator of the world, produced it in a sacrifice. Śiva (Īcaṉ) asked for it and received it, and later gave it to Intiracittu as the reward for his penance.
Vīṭaṇaṉ swears this is true and says its power is like the thunderbolt that strikes at the end of the world.