கம்பராமாயணம் 8283 · யுத்த 18.236

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானைப்
பின் உற வயிரத் திண் தோள் பிணித்தது, பெயர்த்து ஒன்று எண்ணி
என், இனி? அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும்;
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது, புலவோர் எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

ஆயிரம் கண்ணினானை - ஆயிரம் கண்களை உடைய இந்திரன்; பின்உற - புறமுதுகு காட்ட; வயிரத் திண்தோள் பிணித்தது - வலிமை மிக்க (அவனது) தோள்களைக் கட்டியது; அன்னதன் ஆற்றல் அன்றே - அந்த நாக பாசத்தினது ஆற்றல் அல்லவா? அனுமன் தோளை இறுக்கியது - தேவியைத் தேடிச் சென்ற அனுமனது தோள்களைக் கட்டியதும் (இந்நாகக் கணையல்லவா?) புலவர் எல்லாம் - தேவர்கள் எல்லாம்; யாண்டும் - எப்பொழுதும்; பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது இதனால் - தேவ உலகத்தை ஆளும் செல்வத்தை விட்டு நீங்கியதும் இந்த நாகக் கணையால்தான்; பெயர்த்து ஒன்று எண்ணி என் இனி - வேறு ஒன்றை எண்ணி என்ன பயன் இனி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Was it not this thing's power that bound fast the diamond-strong shoulders
  2. of the thousand-eyed one, so that he turned his back? Why think of anything else now?
  3. It was this that bound Aṉumaṉ's shoulders there too;
  4. by this all the gods lost, for good, the wealth of ruling the golden world."

What the poem says

Vīṭaṇaṉ lists the noose's past victories. It bound the thousand-eyed Intiraṉ after he was routed, which is how Intiracittu earned his name. It bound Aṉumaṉ when he went searching for Cītai and let himself be captured in Ilaṅkai.

Because of it the gods lost their rule over heaven. There is no point, he says, in looking for some other explanation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉataṉ āṟṟal aṉṟē āyiram kaṇṇiṉāṉaip
piṉuṟa vayirat tiṇtōḷ piṇittatu, peyarttu oṉṟu eṇṇi
eṉ, iṉi? aṉumaṉ tōḷai iṟukkiyatu itaṉāl āṇṭum;
poṉṉulaku āḷum celvam tuṟantatu, pulavar ellām.