கம்பராமாயணம் 8286 · யுத்த 18.239

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர்வந்து
இரங்கிடத் தக்கது உண்டேல், இகழ்கிலென்; இல்லை என்னின்
உரம் கெடுத்து, உலகம் மூன்றும், ஒருவன் ஓர் அம்பிற் சுட்ட
புரங்களின் தீய்த்து, காண்பேன் பொடி ஒரு கடிகைப் போழ்தின்.

பொருள் · Meaning in Tamil

வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் - இந்திர சித்தனுக்கு வரத்தைக் கொடுத்து இத்தகைய நாகக் கணையையும் கொடுத்தவனாகிய (சிவன்); தானே நேர் வந்து - தானே நேரில் வந்து; இரங்கிடத் தக்கது உண்டேல் - மனம் இரங்கி அருள் செய்வது உண்டானால்; இகழ்கிலென் - இகழாமல் விரும்பி ஏற்றுக் கொள்ளுவேன்; இல்லை என்னின் - அவ்வாறு இல்லாமல் போனால்; உலக மூன்றும் உரம் கெடுத்து - உலகம் மூன்றையும் வலிமை கெடுத்து; ஒருவன் ஓர் அம்பின் சுட்ட புரங்களின் தீய்த்து - சிவபிரான் ஒப்பற்ற ஓர் அம்பினால் சுட்டு அழித்த முப்புரங்களைப் போல் தீய்த்து; ஒரு கடிகைப் போழ்தின் பொடி காண்பென் - ஒரு நாழிகைப் பொழுதில் நீறாக்கிக் காண்பேன் (என்று இராமன் கூறினான்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If he who gave the boon and bestowed this noose comes here himself
  2. with something fit to show mercy, I will not scorn it; if not,
  3. I will break the strength of the three worlds and burn them like the cities
  4. the one god burned with a single arrow, and see them dust within one kaṭikai."

What the poem says

Irāmaṉ states his terms. If Śiva, who granted Intiracittu the noose, comes in person and offers help, Irāmaṉ will accept it gratefully.

If not, he will reduce all three worlds to ash within a single kaṭikai (about twenty-four minutes), just as Śiva once burned the three flying cities of the demons with one arrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘varam koṭuttu iṉaiya pācam vaḻaṅkiṉāṉ tāṉē nēr vantu
iraṅkiṭat takkatu uṇṭēl, ikaḻkileṉ; illai eṉṉiṉ
uram keṭuttu, ulakam mūṉṟum, oruvaṉ ōr ampiṉ cuṭṭa
puraṅkaḷiṉ tīyttu, kāṇpeṉ poṭi oru kaṭikaip pōḻtiṉ.