கம்பராமாயணம் 8287 · யுத்த 18.240
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இலங்கை வேந்தன் தம்பியே - இலங்கை வேந்தனாகிய இராவணனது தம்பியாகிய வீடணனே; எம்பியே இறக்கும் என்னில் - எனது தம்பியாகிய இலக்குவனே இறந்து விடுவான் என்றால்; புகழ்தான் என்னை - புகழுடைய (செயல் இது என்று எண்ண) என்ன இருக்கிறது? பழி என்னை - பழி உடைய செயல் (என்று நாணப்பட) என்ன இருக்கிறது; அறம் தான் என்னை - (இது) தருமத்தோடு இயைந்தது (என்று எண்ணிப் பார்க்க என்ன உள்ளது); உதவி பார்த்தால் - (இவர்கள் எனக்குச்) செய்துள்ள உதவியை (எண்ணிப்) பார்த்தால்; உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் - தேவர்களும் உலகத்தில் உள்ள உயிர்களும்; என்னை நம்பியே சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே - என்னை நம்பிச் சேர்ந்து (எனக்கு உதவிய) நண்பர்களைக் காட்டிலும்; (அவையெல்லாம்) நல்லன (எனச் சொல்ல) ஆகுமோ? என்றபடி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If my brother is to die, then for me, brother of Ilaṅkai's king,
- what is fame? What is blame? What is righteousness?
- When I weigh what they have done for me, are the gods above and the living things of the world
- better to me than the friends who came to me trusting in me?"
What the poem says
Irāmaṉ explains to Vīṭaṇaṉ why he talks of destroying the world. If Ilakkuvaṉ dies, fame, blame and dharma will mean nothing to him any more.
Considering what his friends, the monkeys who joined him out of trust, have done for him, he asks whether the gods and the rest of creation can matter more to him than they do. His loyalty to friends outweighs everything else.