கம்பராமாயணம் 8290 · யுத்த 18.243
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இத்தன்மை எய்தும் அளவின்கண் - (இராமன் முன் கூறிய) தன்மைகளை அடைந்து (வருந்தி) நின்ற நேரத்தில்; நின்ற இமையோர்கள் அஞ்சி - (வானத்தில் போரினைக் காண்பதற்காக நெருங்கி) நின்ற தேவர்கள் அச்சம் கொண்டு; இத்தன்மை - (இராமன் சினமும் வருத்தமும் கொண்டுள்ள) இந்த நிலை; எத்தன்மை எய்தி முடியும் கொல்? என்று - எந்த நிலையை அடைந்து முடியுமோ என்று; குலைகின்ற எல்லை - மனம் நடுங்குகிற பொழுது; அதன்வாய் அத்தன்மை கண்டு - அப்பொழுது அந்த நிலைமையைப் பார்த்து; புடை நின்ற அண்ணல் - இராமன் பக்கத்தில் நின்ற தலைவனாகிய கருடாழ்வான்; தன் அன்பின் மிகையால் - தான் இராமன் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால்; சித்தம் நடுங்கி - மனம் கலங்கி, இது தீர - (இராமன் கொண்ட) இத்துயரம் நீங்குவதற்காக; மெல்ல இருளூடு வந்து தெரிவான் - மெதுவாக இருட்டில் வந்து தோன்றி விளங்கினான். (தொடர்ச்சி அடுத்த பாடலில்)
புடைநின்ற கலுழன் - திருமாலின் அவதார காலத்தில் இலக்குமி, பஞ்சாயுதங்கள் திருவனந்தாழ்வான் கருடன் ஆகியோர் மறைந்து உடனிருப்பர் என்ற ஒருசார் கொள்கை கருதிக் கூறியது என்பர் வை. மு.கோ.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While this was happening, the gods who stood by were afraid, and as they trembled,
- saying, "How will this go, and how will it end?", at that very moment,
- seeing how things stood, the lord Kaluḻaṉ, who stood near, out of the abundance of his love,
- his heart shaken, came gently through the darkness to end this, and appeared.
What the poem says
The gods watching from the sky are afraid of where Irāmaṉ's grief and anger may lead.
At this point Kaluḻaṉ, Garuḍa, the great eagle who is Viṣṇu's mount, arrives out of love for his master to end the crisis. The commentary explains that he "stood near" because of a belief that during Viṣṇu's incarnations his consort, his five weapons, the serpent Ādiśeṣa and Garuḍa stay invisibly at his side. The description of Garuḍa's coming runs over the next several verses.