கம்பராமாயணம் 8291 · யுத்த 18.244

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அசையாத சிந்தை அரவால் அனுங்க, அழியாத உள்ளம் அழிவான்,
இசையான் இலங்கை அரசோடும் அண்ணல் அருள்தன்மை கண்டு பெயர்வான்,
விசையால் அனுங்க வடமேரு வையம், ஒளியால் விளங்க இமையாத்
திசையானை கண்கள் முகிழா ஒடுங்க நிறைகால் வழங்கு சிறையான்.

பொருள் · Meaning in Tamil

அசையாத சிந்தை - (இராமனது) எதற்கும் கலங்காத மனம்; அரவால் அனுங்க - (தம்பியையும் துணைவரையும் கட்டித் துன்புறுத்துகிற நாகக் கணையைக் கண்டு) கலங்கியதால்; அழியாத உள்ளம் அழிவான் - (அதைக் கண்டு தன்) வருந்தாத உள்ளம் வருந்துபவனாயும்; இசையா இலங்கை அரசோடும் - (நல்வழியில்) பொருந்தாத இலங்கை அரசனாகிய இராவணனோடு; அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் - (பிற உலக உயிர்கள் இடத்திலும்) இராமனது அருள் இல்லாத தன்மையைக் கண்டு விரும்பாதவனாயும்; வடமேரு விசையால் அனுங்க - தனது வேகத்தினால் வடக்கின் கண் உள்ள மேரு மலை நிலைகுலையவும், ஒளியால் வையம் விளங்க - (தனது) மேனி ஒளியினால் உலகங்கள் எல்லாம் விளங்கித் தோன்றவும்; இமையாத திசை யானை - கண்ணிமைத்தல் இல்லாத திசை யானைகள்; கண்கள் முகிழா ஒடுங்க - கண்களை ஒடுங்கியிருக்கவும்; நிறைகால் வழங்கு சிறையான் - மிக்க காற்றை வீசுகிற சிறகுகளை உடையவனாயும்; (தொடர்ச்சி அடுத்த பாடலில்)

அண்ணல் அருளின்மை கண்டு நயவான் - தீமை செய்த அரக்கர் குலத்தை மட்டுமன்றி அனைத்துலகையும் அழிப்பேன் என்று இராமன் கூறிய சொற்களில் உள்ள அருள் இல்லாத தன்மை கண்டு புடை நின்ற கருடன் அதனை விரும்பவில்லை என்றார். கருணை வள்ளற்கு இச் சொல்லும் செயலும் இழுக்காம் என்றதனால் கருடன் விரும்பானாயினான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Grieving that the unshakeable mind had been shaken by the serpent, his own unfailing heart failing,
  2. not liking to see the lord's lack of mercy toward the ill-matched king of Ilaṅkai and others,
  3. so that by his speed the northern Mēru and the world trembled, by his light they shone,
  4. and the unblinking elephants of the quarters shut their eyes and shrank, he of wings that loose a full gale...

What the poem says

The description of Garuḍa's arrival continues in a long chain of clauses running across several verses. He is distressed that Irāmaṉ, whose mind never wavers, has been shaken by the serpent weapon.

He is also unhappy, the commentary explains, with Irāmaṉ's merciless threat to destroy all the worlds, not just the guilty demons, since such words do not suit the Lord of compassion. As Garuḍa flies, Mount Mēru shakes, the world lights up, and the elephants that guard the quarters, which never blink, close their eyes against the wind of his wings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1acaiyāta cintai aravāl aṉuṅka, aḻiyāta uḷḷam aḻivāṉ,
icaiyā ilaṅkai aracōṭum aṇṇal aruḷ iṉmai kaṇṭu nayavāṉ,
vicaiyāl aṉuṅka vaṭa mēru vaiyam, oḷiyāl viḷaṅka imaiyāt
ticai yāṉai kaṇkaḷ mukiḻā oṭuṅka niṟai kāl vaḻaṅku ciṟaiyāṉ.